சிங்கம் -2 வசூலை முந்தும் கருப்பு

நடிகர்சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கடைசி படம்2013ல் வெளிவந்த ‘சிங்கம் 2’  . அதன்பின் அவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எதுவும் வியாபார ரீதியாக லாபத்தைத் தரவில்லை. ஓடிடி தளங்களில் மட்டும் வெளியான ‘ஜெய் பீம், சூரரைப் போற்று’ ஆகிய படங்கள் நல்ல விமர்சனத்தைத் தந்தன.

‘சிங்கம் 2’ படம்தான் சூர்யா நடித்த படங்களில் 120 கோடி வசூலைப் பெற்று இதுவரையில் முதலிடத்தில் இருந்தது. அதை தற்போது ‘கருப்பு’ படம் முறியடித்துள்ளது. முதல் மூன்று நாட்களிலேயே இப்படம் உலக அளவில் 147 கோடி மொத்த வசூலைப் பெற்றது. இந்த வார இறுதிக்குள் இப்படம் 200 கோடி வசூலைக் கடக்கும் என பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி நடந்தால் சூர்யாவின் முதல் 200 கோடி படமாக ‘கருப்பு’ படம் அமையும்.