கமல்ஹாசன் பங்கேற்ற சேயோன் திரைப்பட தொடக்க விழா

 

சிவகார்த்திகேயன், பாக்யஸ்ரீ போர்ஸ் இணைந்து நடிக்கும் ‘சேயோன்’ படத்தின் படப்பிடிப்பு

 மதுரையில் தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டு நடந்த தொடக்க நிகழ்வில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். ‘அமரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, சிவகார்த்திகேயன் மீண்டும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்துள்ள படம் இது. கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் ஆகியோரால் தயாரிக்கப்படுகிறது.

இந்த படம் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளை கதை களமாக கொண்டுள்ளது. சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ பாணியிலான படம் என்கிறார்கள். சேயோன் என்றால் 5 தலைமுறைக்கு முந்தைய தலைவன் என்றும், குலம் காத்த குலசாமி என்றும் கூறப்படும், சிவபெருமான், முருகனின் பெயர்களில் சேயோனும் ஒன்று. ‘தாய்கிழவி’ படத்தை இயக்கிய சிவக்குமார் முருகேசன் இயக்குகிறார், சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.