சாதனையை நோக்கி ராம்சரணின் பெத்தி டிரைவர்

புச்சி பாபு சனா இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இயக்கத்தில், ராம் சரண், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குத் திரைப்படம் ‘பெத்தி’. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா  மும்பையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குனர் புச்சி பாபு சனா, இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், ராம் சரண், ஜான்வி கபூர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இப்படத்தின் டிரைலர் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டது. மொத்தமாக இந்த டிரைலர் ரியல் டைமில் 63 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

தற்போது வரையில் தெலுங்கு டிரைலர் 26 மில்லியன், ஹிந்தி டிரைலர் 22 மில்லியன், தமிழ் டிரைலர் 4.6 மில்லியன், கன்னட டிரைலர் 4.1 மில்லியன், மலையாள டிரைலர் 2.4 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.