ஜெயப்பிரகாஷ்,சுப்பிரமணிய சிவா,பிரசன்னா பாலச்சந்திரன் ஆகியோர் நடிப்பில் சிறந்திருக்கிறார்கள்.அவர்களது மனைவிகளாக நடித்திருக்கும் செந்திகுமாரி,வினோதினி,மோகனாஆகி
படத்தில் இளம் இணையரும் இருக்கிறார்கள்.அவர்கள் காதலிக்கிறார்கள்.இணையர்களாக துஷ்யந்த் ஜெயபிரகாஷ் மற்றும் ஜனனி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.இவர்களுடை
மூன்று குடும்பத்தையும் சார்ந்த பிள்ளைகளாக நடித்திருக்கும் சிறுவர்கள் சஞ்சய்,கோகுல்,நிகில் ஆகியோரும் ஏற்றிருக்கும் பாத்திரத்துக்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.
சட்டமன்ற உறுப்பினராக நடித்திருக்கும் சரத் லோகித்ஷவா,மாமன்ற உறுப்பினராக நடித்திருக்கும் சத்யா,காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் அருவி மதன் ஆகியோரால் அந்தக் கதாபாத்திரங்கள் பலம் பெற்றிருக்கின்றன.
ஒளிப்பதிவாளர் தில்ராஜு,வடசென்னையை இதுவரை பார்த்ததிலிருந்து மாறுபட்ட வகையில் காட்சிப்படுத்த வேண்டும் என்று முனைப்பு காட்டியிருக்கிறார்.
ஜேம்ஸ்வசந்தன் இசையமைத்திருக்கிறார்.பாடல்கள் ரசிக்கும் விதமாக அமைந்திருக்கின்றன.பின்னணி இசை மூலம் திரைக்கதையோட்டத்தை வேகமாக்க முயன்றிருக்கிறார்.
படத்தைத் தொகுத்திருக்கும் எஸ்.பாஸ்கர்,சில இடங்களில் படத்தைத் தொய்வடைய வைத்திருக்கிறார்.அதைச் சரி செய்திருந்தால் பெரும்பலமாக இருந்திருக்கும்.
எழுதி இயக்கியிருக்கிறார் மைதீன்.ஒரு பக்கம் குவிந்து கிடக்கும் பணம்,இன்னொரு பக்கம் பணத்தேவையோடு குவிந்து கிடக்கும் மக்கள் ஆகிய இருதரப்பையும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
பணத்தை வைத்திருப்பவர்கள் மனநிலை,பணமில்லாதவர்களின் குண நிலை,அதில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியன குறித்துப் பேசியிருக்கிறார் இயக்குநர்.அவருடைய எண்ணத்துக்கு உயிர்கொடுக்கும் வகையில் சரியான நடிகர்கள் அமைந்திருக்கிறார்கள்.
பணம் மட்டுமே வாழ்க்கை என்று நினைப்பவர்கள் மிகுந்திருக்கும் நேரத்தில் அப்படி இல்லை என்பதை அழுத்தந்திருத்தமாகச் சொல்ல விழைந்திருக்கிறார் இயக்குநர்.