அஸ்ருதா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி புதுமுக இயக்குநர் கணேசன் நாச்சிமுத்து இயக்கியுள்ள திரைப்படம் ஈகோ ராமன். மறைந்தரோபோ சங்கர் கடைசியாக கதை நாயகனாக நடித்துள்ள படம். அவரது இயல்பான கேரக்டருக்கு சம்பந்தமில்லாத கொடூரமான ஈகோ பிடித்தவராக நடித்திருக்கிறார்.
இன்றளவும் கிராமங்களில்
ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையில் ஏற்படும் ஈகோ அதனால் நடந்தேறும் விரும்பதகாத சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதனைநேரில் ஒரு கதையைச் சொல்வதைப்போல திரையில் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.
அப்பா இல்லாத மகன். அம்மாவின் அரவணைப்பில் வளர்கிறான்,அரசு வேலைதான் அம்மாவின் ஒரே கனவாக இருக்கிறது.
அரசுப் பணி என்ற கனவை அடையத் துடிக்கும் மகனின் வாழ்வில் சில நிகழ்வுகள். அதனால் ஆசிரியரின் நட்பு உடைகிறது. தனக்கு உத்வேகமூட்டி வளர்த்தெடுத்த ஆசிரியருக்கும் அந்த மாணவருக்கும் இடையில் ஓர் அடையாளம் தெரியாத ஈகோ யுத்தம் தொடங்குகிறது. அதுதான் ஈகோ ராமன் படத்தின் ஒரு வரி கதை
கிராமத்து அரசுப் பள்ளி ஆசிரியராக ரோபோ சங்கர். போட்டித் தேர்வு எழுதும் இளைஞனாக சிபி புவனச்சந்திரன், நாயகியாக கீர்த்தனா. மேலும், கவிதா ரமேஷ், சப்பானி முரளி, சேரன்ராஜ், லதா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.
எந்த பரபரப்பும் காட்டாமல் மெல்ல கதை நகர்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்ற பதைபதைப்பு நமக்குத் தேவையில்லை. ஓர் அழகிய கிராமத்தில் நடக்கும் சம்பவங்களை நாம் நேரில் பார்ப்பது போன்ற சம்பவங்கள்.
ரோபோசங்கரின் உடல்மொழிகள் அந்த கதாபாத்திரத்திற்குத் பொருத்தமற்றவையாக இருக்கின்றன. ஒரு மாணவரின் தாழ்வுமனப்பான்மையைப் போக்கி அவனை உயர்த்தும் ஆசிரியர்,
ஏன் கொடுரம் நிரம்பியவில்லனைப் போல சித்திரிக்கப்படுகிறார் எனத் தெரியவில்லை. சிபி நடிப்பில் குழந்தையாகவே இருக்கிறார்.நாயகி கீர்த்தனாவின் நடிப்பில் எதார்த்தம். எந்த பகட்டும் இல்லாமல் நடிப்பை வெளிப்படுத்துகிறார்.
பாடல்களும் ரெய்மன் ராட்ரிக்ஸ் இசையும் கவனம் ஈர்க்கின்றன. திரையில் ஓர் அழகிய அனுபவத்தைத் தருவதற்கு இயக்குநர் முயற்சி செய்திக்கின்றார்.