ஆனால் பள்ளி காலத்தில் இருவருக்கும் ஆகாது. ஆனால் இப்போது காலை முதல் மாலை வரை பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தான் இந்த கதையை கொண்டு வந்தார்கள். அப்போது தான் அஸ்வின் கந்தசாமி வந்தார்கள். முதல் முறை கதை சொல்லும் போது எனக்குப் பிடித்து விட்டது. இந்த படத்தில் காமெடி, எமோஷனல் அனைத்தும் இருக்கிறது.
இது போன்ற கதையை நான் சமீபத்தில் கேட்கவில்லை. சந்தோஷை அவ்னியில் அறிமுகப்படுத்துவது எனக்கு மிகப்பெரிய பெருமை. ஒரு தாய்க்கு எந்த அளவுக்கு பெருமை இருக்குமோ அந்த அளவுக்கு எனக்கும் பெருமை உள்ளது. அவரிடம் அந்த பேஷன், வெறித்தனம் என அனைத்தும் உள்ளது. என்னுடைய மகள் அனந்திதா இந்த படத்தில் கிரியேட்டிவ் ப்ரொடியூசர் ஆக அறிமுகமாகிறார்.
‘பொன்னியின் செல்வன் 2’ படத்திலும் வேலை பார்த்தார். இன்றைய தலைமுறையிடம் நாம் என்ன கற்றுக் கொள்ள முடியும் என்பதை இந்த படம் எனக்கு உணர்த்தியது. டபுள் ஆக்குபன்சி படத்தை அனைவரும் திரையரங்கில் பார்க்க வேண்டும். வெளியில் வரும்போது நிச்சயம் கண்கலங்கி வருவீர்கள்” என்றார்.