ஐஸ்வர்யா ராஜேஸ் நடித்திருக்கும் “சுகுமாரி முன்னோட்டம் எப்படி?

நடிகர்திரு வீர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் முதன் முதலாக திரையில் ஒன்றிணைந்திருக்கும் இந்த திரைப்படம் – காதல், நகைச்சுவை மற்றும் கிராமிய பின்னணி நிறைந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அறிமுக இயக்குநர் பரத் தர்ஷன் எழுதி, இயக்கியுள்ள இப்படத்தை கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ்( Gangaa Entertainments) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மகேஸ்வரா ரெட்டி மூலி தயாரித்திருக்கிறார். ‘ஓ! சுகுமாரி ‘ படத்தின் திரையரங்க வெளியீட்டிற்கான முன்னோட்டம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
முன்னோட்டம் எப்படி?
 ‘தாமினி’ என்ற துடுக்குத்தனமான இளம் பெண்ணை கண்டு ஊரே ஒரு விசித்திரமான காரணத்திற்காக அஞ்சுகிறது. அதாவது, அவளை தொடுபவர்களுக்கு மின்சாரம் தாக்கியது போன்ற அதிர்ச்சி ( Electric Shock) ஏற்படுகிறது. இந்த விசித்திரமான ரகசியத்தை மறைத்து, அவளது குடும்பத்தினர்- அவளை நாயகனுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு தனக்கு என்ன காத்திருக்கிறது என்பது அந்த நாயகனுக்கு தெரியாது. இதுபோன்ற அசாதாரணமான சிக்கலை சமாளிக்க போராடும் அந்த புதுமண தம்பதியினருக்கு இடையே ஏற்படும் கலகலப்பான மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளே படத்தின் அடுத்த கட்ட நகர்வாக அமைகிறது. அவர்கள் இருவரும் இணைந்து இந்த சிக்கலை எப்படி எதிர்கொண்டு காதலையும், மகிழ்ச்சியையும் கண்டறிந்து கொண்டாடுகிறார்கள் என்பதே இந்த கதையின் மையம் என்பதை உணர்த்துகிறது முன்னோட்டம்.
இந்த ‘ஓ! சுகுமாரி’ படத்தின் ட்ரெய்லர் நகைச்சுவை, காதல் மற்றும் உணர்ச்சிகளின் புத்துணர்ச்சியூட்டும் கலவையை வழங்குகிறது. மேலும் இது ஒரு ஆரோக்கியமான குடும்ப பொழுதுபோக்கு படைப்பு என்ற எதிர்பார்ப்பையும் அதிகரிக்கிறது. ‘ஓ! சுகுமாரி’ ஜூலை 17ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகர்கள் : திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், முரளிதர் கௌட், விஷ்ணு. ஒய், ஜான்சி, ஆமனி, ஆனந்த் கோட்டா ஜெயராம் .
தொழில்நுட்ப குழு :
இயக்குநர் :  பரத் தர்ஷன்
ஒளிப்பதிவு : சி ஹெச் குஷேந்தர்
இசை : பரத் மஞ்சிராஜு
கலை இயக்குநர்: திருமலா எம் திருப்பதி
படத்தொகுப்பு : ஸ்ரீ வர பிரசாத்