கட்டா குஸ்தி- 2 வசூல்சாதனை

விஷ்ணு விஷால், இயக்குநர் செல்லா அய்யாவுடன் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் ‘கட்டா குஸ்தி 2’. கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதையடுத்து, அதன் இரண்டாம் பாகம் சூலை 3 ஆம் தேதி வெளியானது

விஷ்ணு விஷாலுடன் மீண்டும் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில், முனிஷ்காந்த், காளி வெங்கட், கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஷ்ணு விஷால் மற்றும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படம், காமெடி மற்றும் குடும்ப பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகியுள்ளது.

 ‘கட்டா குஸ்தி 2’, முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நேர்மறையான விமர்சனங்களும், குடும்ப ரசிகர்களின் ஆதரவும் கிடைத்துள்ளதால், இரண்டாவது வாரத்திலும் பல இடங்களில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து, படத்தின் திரையிடல் 700-க்கும் மேற்பட்ட திரைகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.50 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுஇதுவரை விஷ்ணு விஷால் நடித்த படங்களில் 2018-ஆம் ஆண்டு வெளியான ‘ராட்சசன்’ திரைப்படமே அதிகபட்சமாக சுமார் ரூ.40 கோடி வசூலித்திருந்தது. தற்போது ‘கட்டா குஸ்தி 2’ அந்த சாதனையை முறியடித்து, விஷ்ணு விஷாலின் திரைப்பயணத்தில் அதிக வசூல் செய்த திரைப்படமாக உள்ளதாக வணிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.