காதல்நாயகனாக அறியப்பட்ட விஜய்தேவரகொண்டா,இப்படத்தில் காவலர் வேடத்திற்கு பொருந்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் பாக்யஸ்ரீபோஸ் அழகாக இருக்கிறார்.நடிக்கவும் செய்திருக்கிறார்.அவருக்குப் படத்தில் குறைந்த அளவே வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
படத்தின் முக்கிய கதாபாத்திரமான நாயகனின் அண்ணன் வேடத்தில் சத்யதேவ்நடித்திருக்கிறார். தனது கதாபாத்திரத்தின் அடிப்படையில்தான் மொத்தக் கதையும் எழுதப்பட்டிருக்கிறது
வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் வெங்கடேஷ்,கவனிக்க வைக்கிறார்.
ஒளிப்பதிவாளர்கள் கிரிஷ் கங்காதரன், ஜோமோன் டி.ஜான் ஆகியோர் உழைப்பு படத்தின் தரத்தை உயர்த்திக் காட்டப் பயன்பட்டிருக்கிறது.காடுகளுக்கு
அனிருத்தின் இசையும் படத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறது.நாயகன் வரும் காட்சிகளில் அவருடைய பிம்பம் மென்மேலும் உயரும்படி இசைத்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கிறார் கவுதம் தின்னனூர்.ஒரு கடைநிலைக் காவலரை கதாநாயகனாக வைத்துக் கொண்டு தீவுகளில் வசிக்கும் பழங்குடி மக்கள், அந்த மக்களை வைத்து நடக்கும் கடத்தல் தொழில் அதைச்செய்யும் கூட்டம் என மிக விசாலமாகப் போயிருக்கிறார்.கதை பயணிப்பதற்கேற்ற களங்களும் விரிந்து கொண்டே செல்கிறது.
எல்லாம் சேர்ந்து ரசிகர்களுக்கு அளவற்ற முழு சாப்பாடாகக் கொடுக்க வேண்டும் என்று முயற்சித்திருக்கிறார்கள்.அந்த நோக்கம் வெற்றியடைந்திருக்கிறது எனலாம். முதல்பாதியைப் போல் இரண்டாம்பாதியும் அமைந்திருந்தால் அந்த வெற்றி பெருவெற்றியாகி இருக்கும் என்பதில் மாற்றமில்லை.