குறும்பும், உக்கிரமும் நிறைந்த ‘சத்தியவான் சாவித்திரி’ முன்னோட்டம்
சுமார் 1.29 நிமிடங்கள் ஓடும் இந்த முன்னோட்டத்தில் தனது சீனியர் மார்கண்டேயன் போல பெரிய வழக்கறிஞராக வர விரும்பும் அவரது ஜூனியர் சாவித்திரி, குறும்புத்தனத்தால் அதில் கோட்டைவிடுகிறார்.
முக்கிய வழக்கு ஒன்றில் தவறான நபர்களுக்கு ஆதரவாக செயல்படும் தனது சீனியர் மார்கண்டேயனை சாவித்திரி சட்ட ரீதியாக எப்படி எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் மையக்கதை என படக்குழு முன்பு தெரிவித்திருந்த நிலையில், இப்போது வெளியாகி இருக்கும் முன்னோட்டத்தில்சில உக்கிரமான தருணங்கள் இருந்தாலும், அதிகமாக சாவித்திரியின் குறும்புகளே நிறைந்திருக்கின்றன.
ஜீ ஸ்டுடியோஸுடன் இணைந்து, டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு, சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவையும், ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். இந்தப் படம் நவம்பர் 20-ம் தேதி திரைக்கு வருகிறது.