ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘குற்றம் புதிது’. நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சேஷ்விதா கனிமொழி நடிக்கிறார். இவர்களுடன் மது சூதனராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரை, பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜகுமார் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில்(20.08.2025) நடைபெற்றது நிகழ்வில்,
இணைத்தயாரிப்பாளர் எஸ். கார்த்திகேயன் பேசியதாவது.
“ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் இது. உத்ரா புரொடக்சன்ஸ் சார்பாக ஹரி உத்ரா இந்தப் படத்தை ஆகஸ்ட் 29 அன்று தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். அவருக்கு நன்றி. இந்தப் படத்தை எனது மகன் தருண் விஜய் தயாரித்து கதையின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு உங்கள் அன்பும் ஆதரவும் தேவை! அவருடன் இந்த படத்தில் இரண்டு வருடங்கள் இணைத்தயாரிப்பாளராக நான் பணிபுரிந்து தமிழ் சினிமா பற்றி நிறைய கற்றுக் கொண்டேன். இந்த அனுபவத்தை வைத்து அடுத்தடுத்து படங்கள் தயாரிக்க உள்ளேன். அடுத்து ஒரு ஃபேமிலி எண்டர்டெயினர் ரொமாண்டிக் படத்திற்கான கதை விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்து அந்தப் படத்தின் பணிகள் தொடங்கும். ‘குற்றம் புதிது’ படத்திற்கும் தருண் விஜய்க்கும் உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை” என்றார்.
நடிகை பிரியதர்ஷினி,
” இந்த படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இயக்குநர் கதை சொல்லும் போதே புதிய முயற்சி என்பது புரிந்தது. தருண் எந்த தயக்கமும் இல்லாமல் தனது முழு நடிப்பு திறனையும் காட்டி நடித்துள்ளார். நிச்சயம் அவர் அடுத்த கட்டத்திற்கு செல்வார். சஸ்பென்ஸ் திரில்லர் படத்திற்கான உழைப்பை தொழில்நுட்பக் குழுவும் கொடுத்துள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்
நடிகர் தருண் விஜய்,
” சினிமா துறையில் இதுதான் என்னுடைய முதல் படம். என்னுடைய அம்மா, அப்பா ஆதரவு இல்லாமல் நான் ஹீரோவாக முடியாது. அவர்களுக்கு நன்றி! இயக்குநர் நோவா ஆம்ஸ்ட்ராங் என்னுடைய முதல் படத்திலேயே வித்தியாசமான கதாபாத்திரம் கொடுத்துள்ளார். பொறுமையாக தொடங்கும் படம் போகப்போக ஆடியன்ஸை சீட்டின் நுனியில் அமர வைக்கும். கதிரேசன் என்ற ஃபுட் டெலிவரி பையனாக நடித்திருக்கிறேன். உடன் நடித்தவர்கள் எல்லோரும் அனுபவசாலிகள் என்பதால் கொஞ்சம் பதட்டம் இருந்தது. ஆனால், எல்லோரும் ஆதரவு கொடுத்தார்கள். கண்டிப்பாக மீடியாவும் பார்வையாளர்களும் எங்கள் படத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும்” என்றார்.
இயக்குநர் நோவா ஆம்ஸ்ட்ராங்,
” கதை சொல்ல போன முதல் நாளில் இருந்து தற்போது இந்த விழா சிறப்பாக நடப்பது வரை அதற்கு முதல் காரணம் கார்த்திகேயன் சார். தருணுக்கு மிகச் சிறப்பான எதிர்காலம் உள்ளது. கொரிலாவாக நடிக்க கடுமையான பயிற்சி எடுத்தார். நடிகர்கள் சேஷ்விதா, பிரியதர்ஷினி, நிழல்கள் ரவி, தினேஷ் என எல்லாருமே சிறப்பாக நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். அதுபோல தொழில்நுட்பக் குழுவும் சிறப்பாக பணிபுரிந்து இருக்கிறார்கள். இது திரில்லர் படமாக இருந்தாலும் நிறைய எமோஷன் உள்ளது. படம் முடிந்து வரும் பொழுது ‘குட்’டாக ஃபீல் செய்வீர்கள். என்னுடைய அண்ணன், அண்ணி, என்னுடைய மனைவி எல்லோருக்கும் நன்றி”.