மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் துருவிக்ரம் நடிக்கும் தமிழ்படம்

இந்தியாவின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ்  தற்போது தங்களது நான்காவது தமிழ் திரைப்படத்தை தொடங்கியுள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தில் #MythriTamil04 #DV4 படத்தின் தொடக்க விழா  நடைபெற்றது.  இயக்குநர்கள் சசி, ‘ஹாய் நானா’ சௌர்யுவ், ஆதிக் ரவிச்சந்திரன், ஆண்டனி பாக்யராஜ்,  ராஜா  ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த்குமார் இயக்கத்தில் உருவாகும் #DV 4 படத்தில் துருவ் விக்ரம் கதையின் நாயகன். இவருடன் பிருத்வி பாண்டியராஜன், சாய் தீனா ஆகியோர் நடிக்கிறார்கள்.
கமர்ஷியல் என்டர்டடெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி & ரவிசங்கர் யலமஞ்சிலி ஆகியோர் இணைந்து  தயாரிக்கிறார்கள்.
‘பைசன்’ படத்தின்  வெற்றிக்குப் பிறகு நடிகர் துருவ் விக்ரம் நடிக்கும் இப்படத்தில், அவர் முற்றிலும் கமர்சியல் பாணியிலான தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என்கிறது படக்குழு.