தனுஷ் -55 திரைப்படத்தில் ஸ்ரீலீலாவுடன் இணையும் தனுஷ்

 

எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்தது திரையுலகம். ஹாலிவுட் வரை தனது முத்திரையைப் பதித்தவர் நடிகர் தனுஷ்; மறுபுறம் தனது துடிப்பான நடனத்தாலும், வசீகரப் புன்னகையாலும் தென்னிந்திய இளைஞர்களின் இதயங்களைக் கொள்ளையடித்த ஸ்ரீலீலா. இந்த இருவேறு துருவங்கள் ஒரே திரையில் இணைந்தால் எப்படியிருக்கும்? அந்த மாயாஜாலத்தைச் சாத்தியமாக்கத் தயாராகிவிட்டது ‘D55’  திரைப்படக் குழு. ‘அமரன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் அடுத்த படைப்பில்(D55) தனுஷுக்கு ஜோடியாக  ‘ஸ்ரீலீலா’ நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.படக்குழு வெளியிட்ட ஒரு போஸ்டரில் ‘S’ என்ற எழுத்து இடம்பெற்றிருந்ததால், அது சாய் பல்லவியாக இருக்கலாம் என்று தனுஷ் ரசிகர்கள் கணக்கு போட்டனர். ஆனால், “யாரும் எதிர்பார்க்காத ஒன்று இதோ!” என்ற வாசகத்துடன், ஸ்ரீலீலாவை வரவேற்று படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன. தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் (Wunderbar Films) மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் (RTake Studios) இணைந்து தயாரிக்கும் இப்படம், அறிவிப்பு வெளியான அன்றே ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பைஏற்படுத்தியுள்ளது.”