தேசிய திரைப்பட விருதுகளில் 10 விருதுகள் தமிழ் மொழி படத்திற்கு வென்ற
சினிமாவிற்கு இந்திய அரசால் வழங்கப்படும் விருதுகள் கௌரவம் மிக்கதாக திரையுலகினரால் போற்றப்படுகிறது.. அதனால் விருதுக்கு விண்ணப்பிக்கப்படும் திரைப்படங்கள் அதிகரித்து வருகின்றது. மத்திய அரசுடன் இணக்கமாக போகிறவர்கள் பெரும்பாலும் விருது பட்டியலில் இடம்பெறுவது சாதாரண நிகழ்வுகளாக மாறிவருகின்றது.. இதனால் தகுதியான படங்கள் விருதுகளை பெறுவது தாமதமாகி வருகிறது 2024 ஆம் ஆண்டு வெளியான தகுதியான, ரசிகர்களின் பாராட்டுகளை பெற்ற பல திரைப்படங்கள் விருதுபட்டியலில் இடம் பிடிக்க முடியவில்லை.
தேசிய திரைப்பட (72 வது)விருதுகள் 2026 ஜூலை 18 அன்று அறிவிக்கப்பட்டன. 2024-ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான இந்த விருதுகளில், தமிழ் திரைப்படத் துறைக்கு மொத்தம் 10 தேசிய விருதுகளை கிடைத்துள்ளது.
தேசிய விருதுகளை வென்ற
தமிழ்த் திரைப்படங்கள்:
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், கமல்ஹாசன் தயாரித்து, சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்த ‘அமரன்’ திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்றது.
சிறந்த இயக்குநர் – ராஜ்குமார் பெரியசாமி
சிறந்த படத்தொகுப்பு – ஆர். கலைவாணன்
சிறந்த பின்னணி இசை – ஜி.வி. பிரகாஷ் குமார்
நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளை பெற்றது.
சிறந்த சண்டைப் பயிற்சி – அனல் அரசு
சிறந்த துணை நடிகை – சச்சனா நமிதாஸ்
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றது.
தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம்
சிறப்பு நடிப்பு பாராட்டு (Special Mention) – நடிகர் தனுஷ்
தனுஷ் இயக்கி நடித்த
‘ராயன்’ திரைப்படம், சிறந்த தமிழ்த் திரைப்படம் என்ற தேசிய விருதைப் பெற்றது.
கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி
நடித்த, சி. பிரேம் குமார் இயக்கிய ‘மெய்யழகன்’ திரைப்படம் சிறந்த ஒலிக்கலவை (Best Sound Mixing) விருதைப் பெற்றது.
தமிழ் குறும்படமான ‘ப்ளூ’ திரைப்படத்திற்கு, டி. எஸ். ஹரி ஹர சுதன் சிறந்த ஒலி வடிவமைப்பு (Best Sound Design) தேசிய விருதைப் பெற்றார்.