மக்கள்நீதிமய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் எம்.பி:
‘அவ்வை சண்முகி’, ‘பம்மல் கே சம்பந்தம்’, ‘பஞ்சதந்திரம்’ படங்களில் நாங்கள் இணைந்து வேலை செய்த காலங்களின் கலகலப்பு நினைவில் எழுகிறது. அவருக்கு என் அஞ்சலி. அவரது குடும்பத்தாருக்கும் என் ஆறுதல்களும் இரங்கல்களும்.’
அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதியில் நிலைபெறட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.”
அவரது தனித்துவமான மற்றும் இன்னிசையால் ரசிகர்களின் இதயத்தில் நீங்காத இடம் பிடித்தவர் தேவா. அவர் இன்று நம்மிடம் இல்லி என்றாலும் அவரின் இசை என்றென்றும் நம் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும்.’
டி.ராஜேந்தர்:
தமிழ் திரை உலகத்தின் சூப்பர் ஸ்டார் நம்முடைய ரஜினிகாந்த் தொடங்கி, உலக நாயகன் கமல்ஹாசன் என்று அத்தனை முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கும் மட்டுமல்லாமல், எண்ணற்ற நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து, அந்த படங்களை எல்லாம் ஜொலிக்க வைத்தவர். வெற்றி முத்திரையை பதித்து காட்டியவர்.
எந்த இயக்குநர் என்றாலும் அவர்களிடத்திலே எளிமையாக பழகக்கூடிய ஒரு இசையமைப்பாளராய், தயாரிப்பாளருக்கு கைகொடுக்கும் இசையமைப்பாளராய், வாழ்ந்து காட்டியவர் தான் தேவா.
என் மகன் சிலம்பரசன் நடித்த ‘தம்’ திரைப்படத்தில் ‘கலக்குவேன் கலக்குவேன்… கட்டம் கட்டி கலக்குவேன்’… என்று அத்தனை பாடல்கள் மூலம் கலக்கியவர், இன்றைக்கு கலங்க வைத்துவிட்டு சென்றுவிட்டாரே என்பதை நினைக்கும் போது நெஞ்சம் தாங்கவில்லை. அவரை இழந்து வாடக்கூடிய தமிழ் திரை உலகத்தினருக்கும், அவருடைய இல்லத்தாருக்கும், என்னுடைய ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கல்.’
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:
தேவ கானம் என்று போற்றப்பட்ட தனித்துவமிக்க ‘கானா’ பாடல்களாலும், துள்ளல் இசையாலும், இனிமையான மெட்டுகளாலும், மண்ணின் மணம் கமழும் பாடல்களாலும் மக்களின் இதயத்தோடு இரண்டறக் கலந்த தேவாவின் மறைவு இசையுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். அவருடைய இன்னிசையில் வெளிப்பட்ட நாட்டுப்புறத் தன்மையும், எளிய மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்திய பாடல்களும் தமிழ்த் திரையிசை வரலாற்றில், காலத்தால் அழியாத தடங்களாக என்றும் நிலைத்திருக்கும்.
என்னுடைய முதல் படமான ‘பாஞ்சாலங்குறிச்சி’யை தம்முடைய இன்னிசையால் வெற்றி காவியமாக்கிய தேவா மறைவு தனிப்பட்ட முறையில் என் மனதை மிகவும் கனக்கச் செய்கிறது. தமிழ் மண்ணின் மகத்தான இசைக் கலைஞரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரையுல நண்பர்களுக்கும், இசை ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலை தெரிவிப்பதோடு, துயரினை பகிர்ந்துகொள்கிறேன்.
‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் மூச்சுக்காற்று நின்றபோதும் அவர் படைத்தளித்த இசை காற்று தமிழர் உள்ளங்களில் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.’
நடிகர் விஜய் சேதுபதி:
நடிகை சிம்ரன்:
பாடகர் ஸ்ரீனிவாஸ்:
ஆர்.ஜே.பாலஜி:
சிபி சத்யராஜ்:
மிகவும் அன்பான, அமைதியான பண்பாளர். இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு மிகவும் பிடித்தமானவர். முன்னணி நடிகர்களுக்கு அவர் அமைத்துக் கொடுத்த மாஸ் பின்னணி இசை அவர்களை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் சென்றன. சினிமா துறைக்கு இது பேரிழப்பு. அவரது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.’
நடிகர் ராமராஜன்:
அவரின் இசை மீதான பிடிப்பினாலும் அதில் ஆழ்ந்து கற்பிப்பினாலும் தொடர்ந்து கணக்கிலங்கடாத படங்களுக்கு இசையமைத்து ஒரு நல்ல இசையமைப்பாளராகவும் நல்ல மனிதராகவும், சிறந்த ஆன்மிகவாதியாகவும் இன்றளவும் வலம் வந்த மிகச் சிறந்த திறமைசாலி தேவா.
ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் “இயல் இசை நாடக மன்ற” தலைவராகவும், அதிமுக கொள்கை பாடல்களை உருவாக்கியும் அவர் மீது மாறா பற்றுக்கொண்டவர் தேவா. அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.’
இசையமைப்பாளர் சாம் சிஎஸ்: