காவல்துறை அதிகாரி வேடத்துக்கேற்ப பொருந்தி போகிறார் நாயகன் காதலனாகவும் பிரஜின் இயல்பாக மாற்றமடைகிறார்
கதை மொத்தமும் தன்னைச் சுற்றித்தான் நடக்கிறது என்பதை உணர்ந்து அதற்கேற்ப நடித்திருக்கிறார் நாயகி இவானா வருண்.காதல் காட்சிகளில் நளினத்தையும் பதறும் நேரங்களில் சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் எம்.கே.சாம்பசிவம், அம்மாவாக நடித்திருக்கும் செந்தி குமாரி, அனுபமா குமார், அதிரன், ரமேஷ்பாபு கீதா, பத்மன், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன் ஆகிய அனைவரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்பபொறுப்பாக நடித்து தங்கள் பாத்திரங்களுக்கும் படத்துக்கும் பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கிஷோர் ராமச்சந்திரன், காதல் மற்றும் பாடல்காட்சிகளை வண்ணமயமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.தி
எஸ்.ஆர்.ஹரியின் இசையில் பாடல்கள் சிறப்பு.பின்னணி இசை மூலம் காட்சிகளுக்குக் கூடுதல் வலுச்சேர்த்திருக்கிறார்.
இக்னேசியஸ் அஸ்வின் மற்றும் சதீஷ் கொரோசோவா ஆகிய இருவரும் படத்தொகுப்பு செய்திருக்கிறார்கள்.படம் சலிப்பின்றி போகிறது.
எழுதி இயக்கியிருக்கும் சந்தோஷ் இராவணன்,வலிமையான கதை,அதற்குப் பலம் சேர்க்கும் திரைக்கதை ஆகியனவற்றை அமைத்து அடுத்து என்ன நடக்கும்? என்கிற எதிர்பார்ப்போடு படம் பார்க்க வைத்திருக்கிறார்.