இப்படத்தை கே.ஆர். செந்தில்நாதன் எழுதி இயக்குகிறார். பி. மஞ்சுநாத் தயாரிக்கும் இப்படத்தை S2 Movies இணைந்து தயாரிக்கிறது.
அச்சு ராஜாமணி இசையமைக்க, ஷிஹாப் பட்டாம்பி ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.பி. அகமது படத் தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ரெம்பன் பால்ராஜ் கலை இயக்குநராகவும், ஜாக்கி பிரபு சண்டைப் பயிற்சி இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர்.
படத்தின் துவக்க விழாவில் இயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.வி. உதயகுமார், நடிகையும் அரசியல்வாதியுமான YGM மதுவந்தி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
“இந்தப் படம் விளையாட்டை மையமாகக் கொண்ட கதைக் களத்தில் உருவாகிறது. இயக்குநர் கதையை சொன்னபோதே அதற்காக நாங்கள் தயாராக ஆரம்பித்துவிட்டோம். கண்டிப்பாக இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். படம் வெளியான பிறகு மற்ற விஷயங்களை விரிவாகப் பேசலாம். நன்றி.” என்றார்.
நடிகை மதுவந்தி பேசியதாவது..
இந்தப் படத்தில் நானும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகிறேன். போஸ்டரில் என் புகைப்படம் இல்லையே என்று யாரும் கேட்க வேண்டாம், ஆனால் இந்தப் படத்தில் நான் இருப்பது உறுதி.
இது வித்தியாசமான களத்தில் உருவாகும் ஒரு திரைப்படம். குறிப்பாக, இன்றைய தமிழ் சினிமாவுக்கு மிகவும் தேவையான விளையாட்டை மையமாகக் கொண்ட ஆரோக்கியமான கதைக் களத்துடன் இந்தப் படம் உருவாகி வருகிறது. இப்படிப்பட்ட ஒரு நல்ல முயற்சியை மேற்கொண்டுள்ள படக் குழுவினருக்கு எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
இந்தப் பூஜை விழாவோடு மட்டும் இல்லாமல், இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்று இதே உற்சாகத்துடன் வெற்றி விழாவையும் கொண்டாடுவோம் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது..” என்றார்.
நடிகை அஸ்மிதா பேசியதாவது..,
“அனைவருக்கும் வணக்கம். பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம். இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ என்ற தலைப்பே மிகவும் வித்தியாசமாகவும், அனைவரையும் கவரக் கூடியதாகவும் இருக்கிறது. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநர் செந்தில்நாதன் சாருக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தில் நான் இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.
மேலும், இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து கலைஞர்களுடனும் இணைந்து பணியாற்றிய அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தக் கதையும், என்னுடைய கதாபாத்திரமும் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி.” என்றார்.
நடிகை யாஷிகா ஆனந்த் பேசியதாவது..,
“அனைவருக்கும் வணக்கம். இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கிய இயக்குநர் செந்தில்நாதன் சாருக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்த வாய்ப்பை அளித்ததற்காக தயாரிப்பாளருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘டி.டி. நெக்ஸ்ட் லெவல்’ படத்திற்குப் பிறகு, ஒரு நல்ல கதைக்காக காத்திருந்தேன். அப்போது இந்தக் கதை என்னிடம் வந்தது. இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்று இந்த நிகழ்வில் கலந்து கொண்டு எங்களை வாழ்த்த வந்துள்ள சக நடிகர்கள், சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
இந்தப் படத்தை விரைவில் திரையரங்குகளில் உங்களுடன் சேர்ந்து பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். விரைவில் திரையரங்குகளில் அனைவரையும் சந்திப்போம். நன்றி.” என்றார்.
நடிகை ரச்சிதா பேசியதாவது..,
ஏற்கனவே பலரும் கூறியதுபோல், ஒரு திரைப்படத்தை உருவாக்குவது என்பது மிகவும் கடினமான பயணம்.
கதை இன்னும் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பல மாற்றங்கள், விவாதங்கள் நடைபெறும்.
இந்தப் படம் செந்தில்நாதன் சாரின் கனவுப் படைப்பு என்று சொல்லலாம். ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு கனவுத் திரைப்படம் இருக்கும். அதுபோல இந்தப் படம் அவருக்கு மிகவும் முக்கியமானது.
அந்தக் கனவு முழுமையாக நிறைவேற வேண்டும் என்பதற்காக ஒட்டு மொத்த படக் குழுவும் முழு அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறது.
திரைப்படம் உருவாகும் பயணத்தில் பல சிரமங்களும், எதிர்பாராத சவால்களும் வந்தாலும், அவற்றையெல்லாம் கடந்து இன்று இந்தப் படத்தின் பூஜை விழா நடைபெறுகிறது.
இனி இந்தப் படம் எந்தத் தடையும் இல்லாமல் வெற்றிகரமாக நிறைவடைய வேண்டும் என்பதே என்னுடைய மனமார்ந்த விருப்பம்.
போஸ்டரைப் பார்த்தவுடன் நான் ‘பி.டி. மாஸ்டர்’ கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். என்னுடைய கதாபாத்திரம் என்ன என்பதை படத்தில் பார்க்கும்போது உங்களுக்கே தெரியும். அனைவருக்கும் நன்றி.” என்றார்.
இயக்குநர் சங்கம் சார்பில் R.V.உதயகுமார் பேசியதாவது..,
“அனைவருக்கும் வணக்கம். ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ என்ற தலைப்பே மிகவும் வித்தியாசமாகவும், வண்ணமயமாகவும் இருக்கிறது.
இந்த மேடையைப் பார்த்தாலே அந்த உற்சாகம் தெரிகிறது. இன்று இங்கு வந்தவுடன் எனது அத்தனை சோர்வும் மறைந்துவிட்டது.
இயக்குநர் செந்தில்நாதன் மற்றும் ஒட்டு மொத்த படக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
இன்றைய தமிழ் சினிமாவுக்கு மிகவும் தேவையான விளையாட்டை மையமாகக் கொண்ட ஒரு படத்தை உருவாக்கும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது.
இந்தப் படத்தில் பணியாற்றும் நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர் அச்சு, தொழில் நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
இந்தப் படம் ஒரு சிறந்த பொழுதுபோக்கு விருந்தாக அமையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் ஒரு திரைப்படத்தை இவ்வளவு பிரமாண்டமாக பூஜையுடன் தொடங்குவதே பெரிய விஷயம்.
ஒரு திரைப்படத்தை ஆரம்பிப்பதில் இருந்து அதை முடித்து, திரையரங்குகளுக்கு கொண்டு வரும்வரை எண்ணற்ற போராட்டங்களும் சவால்களும் இருக்கின்றன.
படப்பிடிப்பில் வரும் சவால்களைவிட, அந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது.
ஒரு திரைப்படத்தின் வெற்றியை அதன் கதை, நடிகர்களின் நடிப்பு, ஒளிப்பதிவு அல்லது இசை மட்டுமே தீர்மானிப்பதில்லை.
அந்தப் படத்தை சரியான முறையில் ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதும் மிக முக்கியம். அதற்கு நல்ல உள்ளடக்கம் (Content) மட்டுமல்ல, நல்ல நேரமும் (Timing) அவசியம்.
இந்த இரண்டும் சிறப்பாக அமையும்போதுதான் ஒரு திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெறும். ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ திரைப்படமும் அந்த வெற்றியைப் பெற்று ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். படக் குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.” என்றார்.
“இந்த விழாவிற்கு வருகை தந்து, வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்து, அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையில் உங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி” என்றார்.
விளையாட்டு பின்னணியில் நகைச்சுவையும், குடும்ப பொழுதுபோக்கும் கலந்த வித்தியாசமான கதைக் களத்தில் உருவாகவுள்ள ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ திரைப்படம் குறித்து விரைவில் மேலும் பல அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது