பூங்கா இசை வெளியீட்டு விழா

அழகு மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள படம் பூங்கா
நாலு பசங்க பிரச்சனைகளோடு பூங்கா வருகிறார்கள். அங்கு என்ன நடக்கிறதுஎன்பதுதான் கதை என்கிறார் இயக்குநர் தனசேகர்
கதாநாயகனாக கௌசிக் நடிக்கிறார். கதாநாயகியாக ஆரா நடிக்கிறார். இவர்களுடன் சசி தயா, பிரணா, பாலசுப்பிரமணியம், பூங்கா ராமு, திண்டுக்கல் மணிகண்டன், நோயல் ரெஜி, மேஜிக் சரவணகுமார், ஸ்மூல் ராஜா, சாய் ஜேபி, வரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் கே.பி.தனசேகர். ஒளிப்பதிவு ஆர்.ஹெச்.அசோக், இசை அகமது விக்கி, எடிட்டிங் முகன் வேல், கலை குணசேகர், சண்டை பயிற்சி எஸ்.ஆர். ஹரி முருகன், நடனம் சுரேஷ் சித், பிஆர்ஓ கோவிந்தராஜ். தயாரிப்பு கே.பி.தனசேகர், பூங்கா ஆர்.ராமு லட்சுமி, கீதாஞ்சலி லெனினிய செல்வன் மூவரும் இணைந்து தயாரித்து உள்ளனர்.
பூங்காபடத்தின் இசை வெளியீட்டு விழா05.10.2025 காலை சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள பரணி ஸ்டுடியோவில் திரைபிரபலங்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
“பூங்கா” விரைவில் மண் மீது சொர்க்கமாக வெளியாகிறது!