மேஜிக் மக் மூவிஸ் சார்பில் மௌனம் என்கிற பெயரில் புதிய படம் உருவாக உள்ளது. கிரைம் திரில்லர், நிறைந்த இப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இயக்குகிறார்கன்னட திரையுலகை சேர்ந்த . மகேஷ் குமார்
ஒரு காலத்தில் குறைந்த பட்ஜெட்டில் நிறைவான கதைகளை கொண்டு தயாரித்து வந்த கன்னட திரையுலகம் கே.ஜி.எஃப், காந்தாரா, su from so, ஆகிய பிரம்மாண்ட படங்களை தயாரித்து தற்போது முன்னணியில் இருந்து வருகிறது.
அந்த வரிசையில் இப்படத்தின் இயக்குநர் மகேஷ் குமார், டிராகன், ஊட்டி, மிஞ் மிஞ்சுலு, போன்ற படங்களை இயக்கி வெற்றி கண்டவர் இதில் மிஞ்சுலு Karnataka
State Award பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய படத்தின் துவக்க விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் வளாகத்தில் விஜயதசமி அன்று துவங்கியது. அக்டோபர் 20 முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகி தொடர்ந்து 60 நாட்கள் நடைபெற்று படத்தை வெளிக்கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.