லெஜெண்ட் லீடர் ஆனார் மீண்டும் ஆக்க்ஷன் படத்தில் லெஜெண்ட் சரவணன்.

ஜவுளிக் கடை அதிபரான சரவணன், ‛லெஜண்ட்’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கடுமையான விமர்சனங்களை கடந்து அவருக்கென ஒரு ரசிகர் வட்டம் உருவானது. தொடர்ந்து அவர் நடிக்கும் அடுத்த படத்தை எதிர்நீச்சல், கொடி போன்ற படங்களை இயக்கிய ஆர்எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தயாரித்து வருகிறார்.

லீடர்’ படத்தில் பிரபல பாலிவுட் நடிகையான பாயல் ராஜ்புத் நாயகியாக நடிக்கிறார். ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், லால், பாகுபலி பிரபாகர், அமிர்தா ஐயர், விடிவி கணேஷ், ஐஸ்வர்யா, அறந்தாங்கி நிஷா, குழந்தை நட்சத்திரம் இயல், ஜெயஸ்மிர்தா, பத்மன், யோகிராம், ஓ ஏ கே சுந்தர், மகாநதி ஷங்கர், மரியம் ஜார்ஜ், “ஆதித்யா” கதிர், வேல் அருணாச்சலம், நிரஞ்சன், ஷோபன் பாபு, அசோக் பாண்டியன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைக்கிறார். S. வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் E ராகவ் படத்தொகுப்பை கையாளுகிறார். சண்டை பயிற்சி: மகேஷ் மேத்யூ; கலை இயக்கம்: G. துரைராஜ்; உடைகள் வடிவமைப்பு: தீப்தி RJ, பூர்த்தி பிரவின்; உடைகள்: பி. ரங்கசாமி; ஒப்பனை: என். சக்திவேல், அப்துல், ஹர்ஷா கார்த்திக், மூவேந்தர், ரஞ்சித்; சிகை அலங்காரம்: ஜெ. தனசேகரன், அசால்ட் கணேஷ், ஷர்மிளா, ஷிவராஜ்; டப்பிங்: Knack, ஜி. கோதாண்டன், ஜி. விஷ்ணுவர்தன்; வி எஃப் எக்ஸ்: ஃபேந்தம் எஃப் எக்ஸ்; அனிமேஷன்: அம்பானி என் எஸ் கே; டி ஐ: எல் வி பிரசாத் ஸ்டூடியோஸ்; கலரிஸ்ட்: ரங்கா; மிக்சிங்: டி. உதய்க்குமார்; எஸ் எஃப் எக்ஸ்: ஏ. சதீஷ் குமார்; பாடல்கள்: கபிலன், விவேகா; நடனம்: சங்க‌ரையா டி; மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.
படத்தின் படப்பிடிப்பு  இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
அதனையொட்டி நேற்று காலை(04.02.2026) சென்னையில் லெஜெண்ட் சரவணன் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் படத்தின் பெயர் ‛லீடர்’ என அறிவித்ததுடன். அதற்கானஅறிமுக வீடியோவையும் வெளியிட்டார்.
படத்தின் கதை குறித்து விவரித்த படக்குழுவினர்,
 “நிழல் உலகத்திற்கும் காவல் துறைக்கும் இடையே நடக்கும் யுத்தத்தில் ஒரு சாமானியன் சிக்கிக்கொள்கிறான். அதன் தீவிரத்தில் இருந்து அவன் தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் எவ்வாறு காப்பாற்றிக் கொண்டு தப்பிக்கிறான் என்பதே லீடர்,” என்றனர்.