விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் எல்ஐகே.இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பால் ஒவ்வொரு முறையும் பிற தயாரிப்பாளர்கள் தங்களது படங்களின் வெளியீட்டு தேதியை தீர்மானிக்க முடியாமல் தடுமாற்றம் அடைந்து வருகின்றனர் என்பது சினிமா வட்டாரத்தில் விவாதக்குரிய பொருளாகியுள்ளது.இப்படம் வெளியீடு குறித்து கடந்த ஆண்டு, மே 12 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், இந்தத் திரைப்படம் 2025 செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்பின் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்தனர்.
அடுத்து, டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்தனர் ஆனால், மேற்குறிப்பிட்ட மூன்று தேதிகளிலும் அந்தப்படம் வெளியாகவில்லை. என்பதுடன் அதனையும் முன்கூட்டியே தெரிவிக்காமல் கடைசி நாள் வரை காலதாமதம் செய்து ரிலீஸ் இல்லை என்பதை அறிவித்து பிற தயாரிப்பாளர்களின் பட வெளியீட்டை தடுத்தார்கள்.கடந்த சில நாட்களாக இப்படம் பிப்ரவரி 12 அன்று வெளியாகும் என்கிற தகவல் கசியவிடப்பட்டது.அதை நம்பி, அந்தத் தேதியில் வெளியாகவிருந்த சில படங்கள் வேறு வெளியீட்டுத் தேதிக்கு மாறிக்கொண்டிருக்கின்றனர்.ஆனால் ,அந்தத் தேதியில் படம் வராது என்று வியாபார வட்டாரத்தில் கூறுகின்றனர். என்ன காரணம் என கேட்டால்” படம் வியாபாரம் மற்றும் வெளியீடு தொடர்பாக, தயாரிப்பாளர் லலித்குமாருக்கும் இயக்குநர் விக்னேஷ்சிவனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு முடிவுக்கு வராமல் அப்படியே தொடர்ந்து இருந்து வருகிறது.அதனால்,படத்தை வெளியிடுவதற்குத் தேவையான பணம் சம்பந்தப்பட்ட சிக்கல் அப்படியே தொடருகிறது.எனவே, அந்தத் தேதியில் படம் வராது என்று சொல்லப்படுகிறது.
அடுத்து, டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்தனர் ஆனால், மேற்குறிப்பிட்ட மூன்று தேதிகளிலும் அந்தப்படம் வெளியாகவில்லை. என்பதுடன் அதனையும் முன்கூட்டியே தெரிவிக்காமல் கடைசி நாள் வரை காலதாமதம் செய்து ரிலீஸ் இல்லை என்பதை அறிவித்து பிற தயாரிப்பாளர்களின் பட வெளியீட்டை தடுத்தார்கள்.கடந்த சில நாட்களாக இப்படம் பிப்ரவரி 12 அன்று வெளியாகும் என்கிற தகவல் கசியவிடப்பட்டது.அதை நம்பி, அந்தத் தேதியில் வெளியாகவிருந்த சில படங்கள் வேறு வெளியீட்டுத் தேதிக்கு மாறிக்கொண்டிருக்கின்றனர்.ஆனால்
இந்தச் சிக்கலில் நல்லமுடிவு எட்டப்பட்டிருந்தால் தயாரிப்பாளர் லலித்குமார் சார்பிலேயே வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு விளம்பரப்படுத்தும் வேலைகளை தொடங்கியிருப்பார்கள் முடிவு எடுக்கப்படவில்லை என்பதாலேயே அதிகாரப்பூர்வு அறிவிப்பு எதுவும் வரவில்லை என்கிறார்கள்.
இன்னொரு பக்கம், இந்தப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார், தன் மகனை நாயகனாக்கி எடுத்த
சிறை படம் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.அந்தத் தெம்போடு அடுத்தபடத்தையும் அறிவித்து அதன் வேலைகளும் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. அதனால்எல் ஐ கே படத்துக்காக பொறுப்பெடுக்க மாட்டார் என்று சொல்லப்படுகிறது.அதனால் எல் ஐ கே படத்தை வெளியிடும் மொத்தப் பொறுப்பும் விக்னேஷ்சிவனின் தலையில்தான் இருக்கிறது என்கிறார்கள்.