விக்ரம்பிரபு நடித்துள்ள சிறை கிரிஸ்துமஸ் அன்று வெளியாகிறது

விஜய் நடித்த ‘லியோ’, விஜய் சேதுபதி நடித்த ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ உள்ளிட்டபடங்களை செவன் ஸ்கீரின் ஸ்டூடியோ சார்பில் தயாரித்தவர் எஸ்.எஸ்.லலித்குமார். அவர் மகன் எல்.கே.அக்க்ஷய்குமார் நடிகராக அறிமுகமாகும் படம் ‘சிறை’. இதில் விக்ரம் பிரபு நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகிகளாக அனந்தா, அனிஷ்மா நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

எஸ்.எஸ்.லலித்குமார் தயாரிக்கும் இப்படத்தை, வெற்றிமாறனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார். ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ், தான் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.

ஒரு போலீஸ் அதிகாரிக்கும் விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் படத்தின் மையம். இதன் கதை சிவகங்கை பின்னணியில் நடக்கிறது.படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில்  படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்கும் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதன்படி கிறிஸ்துமஸை முன்னிட்டு இந்தப் படம் டிசம்பர்25 ஆம் தேதி வெளியாகிறது.