அதேபோல் சிறந்த நடிகைக்கான விருது ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்த நித்யா மேனனுக்கும், ‘கட்ச் எக்ஸ்பிரஸ்’ என்ற குஜராத்திப் படத்தில் நடித்தமானசி பரேக்கிற்கும் பகிர்ந்து வழங்கப்படுகிறது.துணை நடிகைக்கான விருது ‘உன்சாய்’ என்ற இந்திப் படத்தில் நடித்த நீனா குப்தாவுக்கும், துணை நடிகர் விருது, ‘சவுஜா’ என்ற ஹரியான்வி மொழி படத்தில் நடித்த பவன் ராஜ் மல்ஹோத்ராவுக்கும் அறிவிக்கப் பட்டுள்ளது.‘உன்சாய்’ படத்தை இயக்கிய சூரஜ் பர்ஜத்யாவுக்கு சிறந்த இயக்குநர் விருது வழங்கப்படுகிறது.மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்-1’ படம் 4 விருதுகளைப் பெற்றுள்ளது. அந்த வகையில், சிறந்த தமிழ் திரைப்படம், படத்தின் பின்னணி இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவுக்காக ரவிவர்மன், ஒலி வடிவமைப்புக்காக ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி என 4விருதுகள் கிடைத்துள்ளன. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது 7-வது தேசிய விருது ஆகும். தேசிய விருதுகளை அதிகம் வென்ற இசையமைப்பாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
சிறந்த இசை அமைப்பாளர் (பாடல்கள்) விருதை பிரம்மாஸ்திரா படத்துக்காக பிரீத்தம் பெறுகிறார். சிறந்த சண்டை பயிற்சியாளர் விருது, ‘கே.ஜி.எஃப்’ படத்துக்காக அன்பறிவ் சகோதரர்களுக்கும் சிறந்த நடனத்துக்கான விருது, ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் ‘மேகம் கருக்காதா’ என்ற பாடலுக்காக, நடன இயக்குநர்கள் ஜானி- சதீஷ் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.பின்னணி பாடகிக்கான விருது, மலையாளத்தில் வெளியான ‘சவுதி வெள்ளக்கா’ படத்துக்காக, பாம்பே ஜெயஸ்ரீக்கும், சிறந்த பாடகருக்கான விருது ‘பிரம்மாஸ்திரா’ என்ற இந்திப் படத்தில் பாடிய அர்ஜித் சிங்குக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.சிறந்த திரைக்கதைக்கான விருது ‘ஆட்டம்’ என்ற மலையாளப் படத்துக்காக ஆனந்த் ஏகார்ஷிக்கு வழங்கப்படுகிறது. சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது ‘மாளிகபுரம்’ என்ற மலையாளப் படத்தில் நடித்த ஸ்ரீபத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இந்தியில் சிறந்த படமாக ‘குல்மோஹர்’, மலையாளத்தில் சிறந்த படமாக ‘சவுதி வெள்ளக்கா’, தெலுங்கில் சிறந்த படமாக ‘கார்த்திகேயா 2’, கன்னடத்தில் சிறந்த படமாக ‘கே.ஜி.எஃப்-2’ ஆகிய படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.