இந்தி நடிகர் சல்மான்கானை வைத்து அடுத்தபடம் இயக்குகிறார் என்று முதலில் சொல்லப்பட்டது.அதன்பின் இப்போது,தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து அடுத்த படம் இயக்குகிறார் என்று செய்திகள் வெளியானது.ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.
சல்மான்கானை வைத்துப் படம் இயக்கும் முயற்சி தோல்வி அடைந்ததால் ஏற்கெனவே முறிந்து போன அல்லு அர்ஜுனனுடைய கூட்டணியை புதுப்பித்தாராம் அட்லி.
அவருக்கும் அட்லி இயக்கத்தில் நடிக்கச் சம்மதம்.அந்தப்படத்தை யார் தயாரிப்பது? என்கிற சிக்கல் வந்தபோது சன்பிக்சர்ஸ் மற்றும் அல்லுஅர்ஜூனின் நிறுவனம் ஆகியன இணைந்து தயாரிக்கும் என்று சொல்லப்பட்டது.
அவற்றில் முற்றாக மாற்றம் நடந்துவிட்டதாம்.
ஏனெனில்? அட்லி கேட்ட சம்பளம் மிக அதிகம் என்பதால் அதற்கு சன் பிக்சர்ஸ் ஒப்புக் கொள்ளவில்லையாம்.அப்படி அவர் கேட்ட சம்பளம் சுமார் ஐம்பத்தைந்து கோடி என்று சொல்லப்படுகிறது.அதோடு படத்தின் லாபத்தில் பங்கும் கேட்டார் என்று சொல்கிறார்கள்.இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் நிராகரித்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
அதனால் அல்லுஅர்ஜூன் நிறுவனமே அந்தப்படத்தைத் தயாரிப்பது என்று முடிவாகியிருக்கிறது.அப்போது அட்லியுடன் ஒப்பந்தம் போட தயாரானபோது அந்நிறுவனமும் பெரிய அதிர்ச்சியைச் சந்தித்திருக்கிறது.
அதனால் அல்லுஅர்ஜூன் நிறுவனம் படத்தயாரிப்பிலிருந்து பின்வாங்கிவிட்டதாம்.
அதன்பின், தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு,அட்லி சொன்ன நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டதோடு அவர் கேட்ட சம்பளத்தையும் கொடுத்து இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்தாராம்.
ஆனால், இதை அறிந்த தெலுங்குத் திரையுலகினர் ஒட்டுமொத்தமாகத் திரண்டு வந்து அட்லிக்கு மட்டுமல்ல எந்த இயக்குநருக்கும் இவ்வளவு சம்பளம் கொடுக்கும் பழக்கத்தை உருவாக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள்.
கதாநாயகர்களே பெரிய சம்பளம் எனும்போது, வியாபாரத்தில் பங்கு என்பதை ஏற்றுக் கொண்டு நடிக்கிறார்கள்.அப்படி இருக்கும் நம் திரையுலகில் இயக்குநருக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள்.
அதனால் தயாரிப்பாளர் தில்ராஜும் அதே முடிவை எடுத்துவிட்டார் என கூறப்படுகிறது.