நடிகனுக்கு கெஸ்ட்ரோல், நாயகன் என வித்தியாசம் இல்லை – மோகன்லால்

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்திருக்கும் `எல்2: எம்புரான்’27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தை விளம்பரப்படுத்தும் பணிக்காக `எல்2:எம்புரான்’ படக்குழுவினர் இந்தியாவின் முக்கிய நகரங்களில் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்று வருகிறார்கள்.
நேற்று(மார்ச் 24) சென்னையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பேசிய மோகன்லால், “முதல்ல இந்தப் படத்தை ட்ரையாலாஜியாகதான் பண்ணணும்னு திட்டமிட்டோம்.

இந்த படம் நம்ம சினிமா துறைக்கானது. எல்2: எம்புரான் வித்தியாசமான திரைப்படம்.

முக்கியமாக ஒரு பெரிய ஒத்துழைப்பு இந்தப் படத்துக்குக் கிடைச்சுருக்கு. மக்கள் இந்த படம் பார்க்க விரும்புறதுக்குக் காரணம் முதல் பாகம்தான்.

இந்தப் படம் வெற்றி அடைந்தால்தான் இந்த மாதிரியான படங்களை தொடர்ந்து எடுக்க முடியும். சினிமாங்கிற சக்கரம் சுத்தணும்னுனா பெரிய படங்களும் சின்ன படங்களும் ஓடணும் என்றவரிடம் தொகுப்பாளர்கள்,

“எப்படி 40 வருடங்களில் 400 படங்கள் வரை நடிக்க முடிந்தது?” எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு, “ 40 கிடையாது. மொத்தமாக 47 வருடங்கள்.அந்த 7 வருடங்கள் மிகவும் முக்கியமானது. 400 படம் நடிச்சது எனக்கு ஆசிர்வாதம். நல்ல ஆடியன்ஸ் கிடைச்சிருக்காங்க” என்றார்.

சமீபத்தில் சபரிமலையில் தனது நண்பரான நடிகர் மம்மூட்டி உடல் நலம்பெற வேண்டி பூஜை செய்திருந்தார்.அது குறித்துப் பேசும்போது,

 “அந்த ஆழமான நட்பு பத்தி நான் சொல்லணும். சபரிமலைக்குப் போய் அவருக்காக வேண்டினேன். உங்களுக்காகவும் நான் வேண்டுவேன். என்னுடைய நண்பர்
அவர், என்னோட சகோதரர் அவர். அதனால். அவர் நலமுடன் இருக்கிறார். எல்லோருக்கும் இருக்கிற மாதிரி சின்ன பிரச்னை அவருக்கு அவ்வளவுதான்” என்றவரிடம்,

“நீங்கள் இங்கு உச்ச நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கிறீர்கள். ஆனால், அவர்கள் மலையாளத்தில் வந்து அப்படி நடிப்பார்களா?” எனச் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு,

“கெஸ்ட் ரோல்னு கிடையாது. ஐ எம் ஆக்டர், அவ்வளவுதான்” எனச் சிம்பிளாகக் கூறி முடித்துக் கொண்டார்.