‎ கட்ஸ் – திரைப்பட விமர்சனம்

தமிழ் சினிமாவில் காலங்காலமாக சொல்லப்பட்டு வரும் அப்பா – மகன் கதைதான் கட்ஸ் திரைப்படத்தின் ஒருவரிக் கதை.
தனது மனைவி சுருதி நாராயணனை பிரசவத்திற்காக ரங்கராஜ் (அப்பா) அழைத்து செல்லும் போது ஒரு கும்பலால் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார்.
இதனால் பிறக்கும் போதே தந்தையை இழந்த ரங்கராஜ் (மகன்), தாயையும் சிறு வயதிலேயே இழக்கிறார்.  தாய் சுருதி நாராயணன் விருப்பப்படி படித்து போலீஸ் அதிகாரி ஆகிறார் ரங்கராஜ்.
நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கும் ரங்கராஜ், மனைவி நான்சி மற்றும் மகளுடன்  வாழ்ந்து வருகிறார். திடீரென ரங்கராஜ் மனைவி நான்சி வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்.
 மனைவியை பறி கொடுத்த ரங்கராஜ் வாழ்க்கையையே வெறுத்த நிலையில் அவருக்கு தனது மனைவியையும், தந்தையையும் கொலை செய்த கொலையாளி பற்றி தகவல் தெரிய வருகிறது.
 கொலையாளி யார்? எதற்காக கொலை செய்தார்? அதன் பின்னணி என்ன என்பதே படத்தின் மீதி கதை.முதல் படத்திலேயே தந்தை, மகன் என்ற இரட்டை கேரக்டரில் நடித்து இயக்கி உள்ளார் ரங்கராஜ். திரைக்கதையில் வேகம் இல்லை.
 கதைக்கேற்ற  நடிப்பை வழங்கியுள்ளார் ரங்கராஜ்.
கிராமத்தில் உள்ள கர்ப்பிணி பெண்ணாக சுருதி நாராயணன். யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவரது கேரக்டர் அழுத்தமாகவும் இருக்கிறது. அதேபோல் மனைவியாக வரும் நான்சி, ஒருசில காட்சிகளே வந்தாலும் அவரது நடிப்பு மனதில் நிற்கிறது.
போலீசாக வரும் டெல்லி கணேஷ்,
சப்-இன்ஸ்பெக்டராக வரும் பிர்லா போஸ், சாய் தீனா, ஸ்ரீலேகா, அறந்தாங்கி நிஷா ஆகியோரின் நடிப்பு படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

மனோஜ் ஒளிப்பதிவு கிராமத்தை அழகாக காட்டி இருப்பதுடன் காட்சிகளும் பளிச்சுடுகிறது. ஜோஸ் பிராங்க்ளின் இசை படத்தை ரசிக்க வைக்கிறது. பாடல்களில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.