லவ் மேரேஜ் – திரைப்பட விமர்சனம்

குடும்பங்களின் சூழ் நிலை, அவர்களின் எண்ண ஓட்டம் இவற்றை மையமாக கொண்ட கதையை காதல் உணர்வுடனும், திரைக்கதையை சுவாரசியம் குறையாமலும் பின்னப்பட்டிருக்கும் திரைப்படம் 

லவ் மேரேஜ்
திருமணம் சாதி மதத்தினாலோ அல்லது ஊரார் பேச்சுக்காக
 சம்பிரதாயமாக நடைபெறாமல் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதுடன், இவரைத் தவற விட்டு விடக் கூடாதென்று யார் மேல் நமக்கு ஈர்ப்பு ஏற்படுகிறதோ, அதுதான் உண்மையான காதல் என்பதை சொல்கிறது” லவ் மேரேஜ்” திரைப்படம்.அதை ஒரு ஃபீல் குட்  படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஷண்முகப்பிரியன்

கோபத்தை கூட அமைதியாக காட்டும் வேடம் விக்ரம் பிரபுவுக்கு. ஒரு பெண்ணின் மேல் வைத்த காதல் தோல்வி அடைந்த நிலையில் திருமண ராசி இல்லாதவர் என்று உறவுகளே சொல்லும் வேடத்தில் நடித்திருக்கிறார்.

அதேபோல் நிச்சயிக்கப்பட்ட நாயகி சுஷ்மிதா பட்டும் கை நழுவிப் போய்விட, அவர் தங்கை மீனாட்சிக்கு தான் மீது அரும்பும் காதலை ஏற்கவும் முடியாமல், நிராகரிக்கவும் முடியாமல் தவிக்கும் போதும் அற்புதமாக உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.

விக்ரம் பிரபுவின் அப்பாவாக வரும் கஜராஜ், தாய் மாமாவாக வரும் அருள்தாஸ், நண்பனாக வரும் ரமேஷ் திலக் அனைவருமே அவரவர் பாத்திரங்களில் ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
மதன் கிறிஸ்டினின் கண்கவர் ஒளிப்பதிவும்,  ஷான் ரோல்டனின் இனிய இசையும் சிறப்பு .

முன்பாதியில் இருக்கும் சுவாரசியம் பின்பாதியில் குறைகிறது. பின்பாதியில் கதையே இல்லாததால், சத்யராஜை சிறப்புத் தோற்றத்தில் மைக் பிடிக்க வைத்திருக்கிறார்கள். ஆனால், அதுவும் எதிர்பார்த்த அளவு எடுபடவில்லை.

குறைகளை கடந்து குடும்பத்துடன் கண்டுகளிக்க கூடிய ஆபாசம், வன்முறை இல்லாத படம் லவ் மேரேஜ்