ரஜினிகாந்த் முயற்சியில் இந்தியன் – 3 பிரச்சினைக்கு சுமுக தீர்வு

ஷங்கர் இயக்கத்தில் அனிருத் இசையில் கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிப்பில் உருவான ‘இந்தியன் 2’ படம் கடந்த வருடம் வெளியானது. வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. கடுமையான விமர்சனங்களை இப்படம் எதிர்கொண்டது.

 அதன்பின் ஷங்கர் இயக்கத்தில் இந்த வருடம் வெளிவந்த ‘கேம் சேஞ்ஜர்’ தெலுங்குப் படம்,  வெளிவந்து  தோல்வியைத் தழுவியது. இதனால், ‘இந்தியன் 3’ படத்தை முடித்து வெளியிடலாமா வேண்டாமா என்கிற தீவிர ஆலோசனையில் தயாரிப்பு நிறுவனமான லைகா இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற புத்தக விழா ஒன்றில் கலந்து கொண்ட ஷங்கர், ரஜினிகாந்த் இருவரும்மனம் விட்டுப் பேசியுள்ளனர். அப்போது ‘இந்தியன் 3’ குறித்த தனது ஆதங்கத்தைத் தெரிவித்திருக்கிறார் ஷங்கர். அதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், நடிகர் கமல்ஹாசன் ஆகியோருடன் பேசியுள்ளார். இதன் காரணமாக  ‘இந்தியன் 3’ படத்திற்கான எஞ்சியுள்ள சில நாட்கள் படப்பிடிப்பை நடத்துவதற்கு தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ஒப்புக் கொண்டுள்ளார். முடிவு எட்டப்பட்டதாம். அதனால் இந்த வருடம் இறுதிக்குள் இந்தியன் – 3 வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.