மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான‘தக் லைஃப்’ படத்துக்குப் பின் மணிரத்னம் காதல் கதை ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த படத்தில் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கவுள்ளார். நாயகியாக ருக்மணி வசந்த் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் பணிபுரியவுள்ளார். இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இதனை தயாரிக்கவுள்ளது.
முதலில் இக்கதையை புதுமுகங்களை வைத்து இயக்க திட்டமிட்டு இருந்தார். பின்பு சிம்புவை வைத்து திட்டமிட்டார். ஆனால், ‘தக் லைஃப்’ தோல்வியினால் இப்போது துருவ் விக்ரமை வைத்து இயக்கவுள்ளார். விக்ரம் நடிப்பில் ‘ராவணன்’ மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ படங்களை ஏற்கனவே இயக்கியுள்ளார் மணிரத்னம். தற்போது அவரது மகனை வைத்து படம் இயக்க முடிவு செய்திருக்கிறார்.