தங்கள் தாயகத்தின் இறையாண்மையை மீட்டெடுக்க 30 ஆண்டு காலம் மறப் போராட்டத்தை நடத்திய ஈழத் தமிழ் மக்கள் அதற்காக கொடுத்த விலை அதிகம். லட்சக்கணக்கான மக்கள் சிங்கள இன வெறி அரசால் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் இன்னுயிரை ஈகம் செய்து இருக்கிறார்கள்.
இந்நிலையில் வீரம் செறிந்த ஈழ விடுதலைப் போராட்டத்தையும், ஈழத் தமிழர்களையும் தவறாக சித்தரித்து திரைப்படங்கள் வெளியிட்டு வரலாற்றை சிதைக்கின்ற முயற்சி கடும் கண்டனத்திற்குரியதாகும். எனவே தமிழகத்தில் ‘கிங்டம்’ தெலுங்கு திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில்,
இலங்கை போர் முடிந்து 15 ஆண்டுகளை கடந்தும் தமிழினத்தின் படுகொலைக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. இலங்கை ஆட்சியாளர்கள் மீது பன்னாட்டு போர்க் குற்ற விசாரணை நடத்தக் கோரியும், இலங்கை தமிழர்களிடம் தனி நாடாக பிரிந்து செல்வதற்கான ஒரு பொது வாக்கெடுப்பை நடத்தக் கோரியும் பன்னாட்டு மன்றத்தில் இன்று வரை போராடி வருகிறோம்.
எனவே, ‘கிங்டம்’ திரைப்படத்தை தமிழக திரையரங்குகளில் திரையிடுவதை முற்றாக நிறுத்த வேண்டும். இல்லையென்றால் திரையரங்குகளை முற்றுகையிட்டு, அத்திரைப் படத்தைத் தடுத்து நிறுத்துவோம்” என்று சீமான் எச்சரித்துள்ளார். விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ படம் ஜூலை 31-ல் வெளியானது குறிப்பிடத்தக்கது.