நாயகனாக நடித்திருக்கும் ரஜினி கிஷன், அறிமுக நடிகர் போல் இல்லாமல் நடனம்,சண்டை என எல்லாவற்றிலும் சரியாகச் செய்து வரவேற்புப் பெறுகிறார்.
முனீஸ்காந்த்,மொட்டை ராஜேந்திரன்,கூல் சுரேஷ்,கல்கி ராஜா ஆகியோரில் நேர்மறையாக முதலிருவர் சிரிக்க வைக்க முயன்றிருக்கிறார்கள்.அடுத்த இருவர் எதிர்மறையாக நடித்து சிரிக்க வைக்க முயன்றிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் என்.எஸ்.சதீஷ் குமார், படம் வண்ணமயமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து வேலை செய்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் எம்.எஸ்.ரமேஷ்பாரதி, படம் முழுக்க நகைச்சுவையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து இயக்கியிருக்கிறார்.அதற்காகவே முனீஷ்காந்த்தை தூங்கி வழிபவராகவும் மொட்டை ராஜேந்திரனை ஆவிகள் மையம் நடத்துபவராகவும் வடிவமைத்திருக்கிறார்.
ரஜினி பிம்பத்தின் துணையுடன் திகில் மற்றும் நகைச்சுவைப் படங்களுக்குரிய அம்சங்கள் அனைத்தையும் கலந்து கொடுத்து சிரிக்க வைக்க மெனக்கெட்டிருக்கிறார்.