பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தயாரிப்பாளரான அனுப் மோகன் தலைமையில் இத்திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. இந்தப் படத்தை ராகுல் சக்கரவர்த்தி இயக்குகிறார். கதையை விஜய் பார்கவ் எழுதியுள்ளார். அன்று தொடங்கும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ‘2018’, ‘ரேக்காசித்திரம்’ மற்றும் ‘மாளிகப்புரம்’ போன்ற பல படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான காவ்யா ஃபிலிம் கம்பனி (Kavya Film Company), நடிகர்ஆர். சரத்குமாரின் பிறந்தநாளானஜூலை 14 ஆம் தேதி அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, தற்காலிகமாக “புரொடக்ஷன் நம்பர் 12” (Production No. 12) என்று பெயரிடப்பட்டுள்ள புதிய தமிழ் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவான ‘கிங்ஸ்டன்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கமல் பிரகாஷ் இப்படத்தை எழுதி இயக்குகிறார். தயாரிப்பாளர் வேணு குன்னப்பள்ளி பகிர்ந்து கொண்டதாவது: “சரத்குமார் சார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு எங்களது அடுத்த தமிழ் படத்தை அறிவிப்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். பல தலைமுறைகளை கடந்து ரசிகர்களை கவர்ந்து வரும் அவரது நடிப்புத் திறமையும் பன்முகத்தன்மையும் திரைத்துறையினருக்கு எப்போதும் உத்வேகம் அளிப்பவை. ஒரு வலுவான கதையும், அர்ப்பணிப்புடன் கூடிய படக்குழுவும் இணைந்திருக்கும் இத்திரைப்படத்திற்கு சரத்குமார் சாரின் வருகை கூடுதல் பலமாக இருக்கும். இயக்குநர் கமல் பிரகாஷ் இந்த கதையை மிகத் தெளிவோடும் நம்பிக்கையோடும் அணுகியுள்ளார். ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத சினிமா அனுபவத்தை வழங்க நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம்,”‌என்றார். இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் நவம்பர் 2026-க்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இத்திரைப்படம் 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது என்றார். இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு: கோகுல் பெனாய் இசை: ஜஸ்டின் பிரபாகரன் படத்தொகுப்பு: கலைவாணன் ஆர் கலை இயக்கம்: எஸ்.எஸ். மூர்த்தி கூடுதல் திரைக்கதை & வசனம்: தமிழ் பிரபா (Thamizh Prabha – ‘சார்பட்டா பரம்பரை’, ‘தங்கலான்’ புகழ்) ஆடை வடிவமைப்பு: தினேஷ் மனோகரன்படத்தின் தலைப்பு, மற்ற நடிகர்கள் மற்றும் கூடுதல் விவரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும் மாதங்களில் ஒவ்வொன்றாக வெளியிடப்படும்.

இயக்​கிய ராசி அழகப்​பன் அடுத்து இயக்​கும் படத்​துக்கு ‘ஆண்ட’ என்று தலைப்பு வைத்​துள்​ளார். இப்​படத்தை மதர் ஆர்ட்ஸ் இன்​டர்​நேஷனல் சார்​பில் அவரே தயாரிக்​கிறார்.

படம் பற்றி அவர் கூறும்​போது,

“சில வருடங்​களுக்கு முன் நான் எழு​திய ‘விருட்​சம்’ என்ற சிறுகதை​யின் அடிப்​படை​யில் இப்படத்தின் கதையை உரு​வாக்​கி​யுள்​ளேன். ஜென் ஸி தலை​முறை​யின் பார்​வை​யில் தொடங்​கி, 1980-களின் வாழ்க்​கைச் சூழலை உயிர்ப்புடன் கண்​முன் கொண்டு வந்து நிறுத்​தும் கதை​யாக
உரு​வாகிறது.

இதில் இடம்​பெறும் தட்​சணா​மூர்த்தி என்ற கதா​ பாத்​திரத்​தின் முழு​மை​யான வாழ்க்​கைப் பயணமே கதை​யின் மையம். வானத்தை நோக்கி கனவு​களைக் கண்ட ஒரு மனிதன், மண்ணோடு இணைந்து வாழ்ந்த வாழ்க்​கை, அவன் சந்​தித்த சவால்கள், சமூகப் பொறுப்​பு, மனித நே​யம் மற்​றும் வாழ்​வியல் நெறிகள் ஆகிய​வற்றை பதிவு செய்​யும் படைப்​பாக இது இருக்கும். புது முகங்​கள் நடிக்​கின்​றனர்” என்​றார்.