நடிகர்விஷால் மூன்று வேடங்களில் நடித்திருக்கும்மகுடம் முன்னோட்டம்

நடிகர்விஷால் இயக்கி, நடித்திருக்கும் படம் ‘மகுடம்’. இந்தப் படத்தில் அவருடன் துஷாரா விஜயன், அஞ்சலி, ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது

இரண்டேமுக்கால் நிமிடங்கள் ஓடும் ‘மகுடம்’ முன்னோட்டத்தில் லிங்கா என்கிற கதாபாத்திரத்தின் இளமை, முதுமை தோற்றம், கிருபாகரன் என்கிற சாந்தமான மருந்து விற்பனர் என மூன்று விதமான வேடங்களில்  விஷால் நடித்துள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மனைவி, குழந்தைகள் என குடும்பத்துடன் யார் வம்புக்கும் போகாத கிருபாகரன், காதலையே முரட்டுத்தனமாக வெளிப்படுத்தும் காதலி பின்னால் திரியும் லிங்கா என இரண்டு வாழ்க்கை வேகமாக விரிகிறது. இந்த இரண்டு துருவங்களும் ஒரு புள்ளியில் மோதுவதாய் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது முன்னோட்டம்.

பாந்தமான குடும்பத் தலைவியாக துஷாராவும், பந்தாவான காதலியாக அஞ்சலியும் கவர்கிறார்கள். கண்ணைக் கவரும் முன்னோட்டம் துள்ளலுக்கு கைகொடுத்து இருக்கிறது ஜி.வி.பிரகாஷின் இசை.

கேங்ஸ்டர் விஷாலின் கெட்டப்புகள் முந்தைய அவரது ஒரு  படத்தின் சாயலை ஞாபகப்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. என்றாலும், இந்தக் காதாபாத்திரம் அதன் பிரதிபலிப்பு இல்லை என்பதுபடம் வந்தால் தெரிந்து விடும்.

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் மகுடம் படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாக இருக்கிறது.