இம்மூன்று படங்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை மற்றும் இணையதள ஒளிபரப்பு உரிமை ஆகியனவற்றை விற்பனை செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற தொடங்கியுள்ளது.
அடுத்து யாரை தொகுப்பாளராக நியமிப்பது? என்கிற குழப்பத்தில் அந்நிறுவனம் இருந்ததை அறிந்த கமல்ஹாசன்,இதை தனது பட வியாபாரத்துக்கு பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்த கமல்ஹாசன் ந
விஜய் தொலைக்காட்சி நிர்வாகத்தை தொடர்புகொண்டு,மீண்டும் நான் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வருகிறேன்,அதற்காக நீங்கள் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் படங்களின் உரிமைகளை வாங்கிக் கொள்ளவேண்டும்,அதற்காக இவ்வளவு தொகை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
இன்றைய சந்தை நிலவரப்படி அவர் கேட்ட தொகை பெரிது என்று நிறுவனம் கருதுகிறது.அதனால் முடிந்த அளவு குறைத்துப் பேசுங்கள்,அதேசமயம் எப்படியாவது இந்த வியாபாரத்தை முடிக்கவேண்டும் ஏனெனில்,இந்தப் படங்களின் உரிமைகளை வாங்குகிறோம் என்பதைவிட பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் கமல்ஹாசன் வருவது முக்கியம் என நிறுவனத்தின் மேலிடம் சொல்லியிருக்கிறதாம்.
கமல் திட்டமிட்டபடி இந்த வியாபாரம் முடிவடைந்தால்,ராஜ்கமல் நிறுவனத்துக்கு மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
இதற்காகவே,இனி எப்போதும் பிக்பாஸ் நிகழ்ச்சியே வேண்டாமென முடிவெடுத்த கமல்ஹாசன்,மீண்டும் அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ஒப்புக்கொண்டிருக்கிறார். பணம் பத்தும் செய்யும் என்கிறார்கள்