ஓர் இளைஞனின் கல்லூரிக்காதல்,அதன்பின்னான இன்னொரு காதல் ஆகிய இரண்டையும் வைத்துக் கொண்டு இன்றைய இளையதலைமுறையின் உளவியலைப் பல்வேறு கோணங்களில் பதிவு செய்திருக்கும் படம் ‘ஹைகூ’
நாயகனாக நடித்திருக்கும் ஏகன்,கல்லூரியில் படிக்கும்போது உடன் படிக்கும் நாயகி ஸ்ரீதேவியைக் காதலிக்கிறார்.அந்தக்காதல் முறிகிறது.அதன்பின்,வேலைக்குப் போகுமிடத்தில் இன்னொரு நாயகி ஃபெமினாவைக் காதலிக்கிறார்.அந்தக்காதலிலும் சிக்கல்கள்.அவை என்னென்ன? அவற்றின் முடிவென்ன? ஆகிய கேள்விகளுக்கான விடைகள் தாம் படம்.
நாயகனாக நடித்திருக்கும் ஏகன்,ஒட்டுமொத்தக் கல்லூரியிலும் மாணவிகளே நிறைந்திருக்க ஒரே மாணவராக இவர் போகிறார்.அப்படிப்பட்ட இடத்தில் இருக்கும் ஒரு மாணவனின் மனநிலையை நடிப்பில் வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.முதல்காதல்,அடுத்த காதல் ஆகியனவற்றிற்கான வயது இடைவெளியை தோற்றத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் காட்டியிருக்கிறார்.
கல்லூரி மாணவியாக நடித்திருக்கும் ஸ்ரீதேவிக்கு,வெறுமனே காதலியாக வந்துபோகாமல் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளும் வேடம்.எல்லா இடங்களுக்கும் ஏற்ற நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
கல்லூரி மாணவி மட்டுமின்றி மணமான இளம்மனைவியாக வரும் அவருடைய வேடத்தின் முதிர்ச்சியை நடிப்பிலும் வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.
இன்னொரு காதலியாக வரும் ஃபெமினாவும் ரசிக்கதக்க வகையில் இருக்கிறார்.அவருடைய அழகும் நடிப்பும் நன்று.காதலில் திளைப்பதும் காதலனை எண்ணிக் கலங்குவதும் இயல்பாக இருக்கிறது.
சித்துகுமார் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசையிலும் கவனிக்க வைத்திருக்கிறார்.
பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.காட்சிகளில் இளமைத்துள்ளலும் இருக்கவேண்டும் கதாபாத்திரங்களின் முதிரும் உணர்வுகளும் பதிவாகவேண்டும் என்று கவனம் செலுத்தியிருக்கிறார்.
சக்தி பிரணேஷ்.பியின் படத்தொகுப்பு,படம் இயல்பாக நகர உதவியிருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் யுவராஜ் சின்னசாமி,ஒட்டுமொத்தக் கல்லூரியிலும் ஒரேமாணவன் மீதி எல்லாம் மாணவிகள் என்கிற சுவையான களத்தில் படத்தைத் தொடங்கி,காதல் வழி சென்று வாழ்க்கை அனுபவங்களைக் கற்றுக்கொடுக்க முயன்றிருக்கிறார்.,காதலர்கள்,