ஆக்ரோசமான காவலதிகாரியாக சூர்யாவைப் பார்த்திருக்கிறோம்.
எதிர்மறை வேடத்தில் நடித்திருக்கும் நஸ்லன்,பொருத்தமாக நடித்திருக்கிறார்.சின்னச் சின்ன அசைவுகள் மற்றும் பார்வைகளால் அந்த வேடத்தைப் பெரிதாக்குகிறார்.
சூர்யாவின் அப்பாவாக நடித்திருக்கும் ஆனந்தராஜ் வரும் காட்சிகள் அதகளம்.காவல்துறை உயரதிகாரியாக நடித்திருக்கும் லால்,காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் ராஜ்பிரியன்,இன்னொரு ஆய்வாளராக நடித்திருக்கும் சுரேஷ் மதிழயகன், நஸ்ரியாவின் அப்பாவாக நடித்திருக்கும் கஜராஜ் ஆகிய அனைவரும் நன்றாக நடித்து படத்துக்குப் பலமாக இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் வினித் அகஸ்டியன்,பார்வையற்றவரின் பார்வையில் காட்சிகளைக் கொடுக்க மெனக்கெட்டிருக்கிறார்.காட்சி
சுசீன் ஷாமின் இசையில் பாடல்கள் நன்று.பின்னணி இசையால் படத்தைப் பன்மடங்கு உயர்த்திப் பிடித்திருக்கிறார்.
அஜ்மல் சாபு படத்தொகுப்பு செய்திருக்கிறார்.முதல்பாதியில் சில தொய்வுகள் இருந்தாலும் போகப்போக வேகம் பிடிக்கும் படம் கடைசிவரை அதே வேகத்தோடு பயணிக்கிறது.
திகில் மற்றும் புலனாய்வுப் படமா? அது இப்படித்தான் இருக்கும் இப்படித்தான் போகும் என்கிற இரசிகர்களின் எண்ணத்தைப் பொய்யாக்கும் விதமாக திரைக்கதை அமைத்து காட்சிகளையும் வைத்திருக்கிறார் இயக்குநர் ஜித்துமாதவன்.
கண்பார்வையற்றவர் என்றாலும் காவலதிகாரிகளுக்குரிய மிடுக்கு சற்றும் குறையாமல் சூர்யாவின் வேடத்தை எழுதியிருக்கிறார்.