நாகர்ஜுனா நடிக்கும் தெலுங்கு படத்தில் அசோக் செல்வன்

நித்தம் ஒரு வானம்’, ‘மேட் இன் கொரியா’ (Made in Korea) ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ர.கார்த்திக் இயக்கியுள்ள படம்’ கிங் 100. நாகர்ஜீனா, தபு நடித்துள்ள இப்படம்  அவர் இயக்கும் மூன்றாவது திரைப்படமாகும்.
‘கிங் 100 – King 100’ படக்குழுவினர், இப்படத்தில் ‘கர்ணா’ எனும் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் அசோக் செல்வனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதில்அசோக் செல்வன் முற்றிலும் மாறுபட்ட வித்தியாசமான தோற்றத்தில் அசத்துகிறார். ஸ்டைலான மெரூன் நிறச் சட்டை அணிந்து, நீண்ட தலைமுடி மற்றும் அடர்த்தியான தாடியுடன் நாற்காலியில் மிகவும் இயல்பாகவும், அதேசமயம் மிரட்டலான தோரணையிலும் அமர்ந்திருக்கிறார். அவரது கையில் சிகரெட், அருகில் அலட்சியமாக வைக்கப்பட்டிருக்கும் காக்கி நிறக் காவல்துறை சீருடை மற்றும் முன்புறத்தில் ‘கிங்’ (King) எனும் சதுரங்க விளையாட்டின் தலைமைக்காயுடன் கூடிய சதுரங்கப் பலகை என இந்தப் போஸ்டரில் பல சுவாரசியமான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. புகை மூட்டமான சூழலும், இருண்ட பின்னணியும் படத்திற்கு ஒரு மர்மமான ஈர்ப்பை அளிக்கின்றன.
இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ராஜா மகாதேவன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை நவீன் நூலி கவனிக்க, தயாரிப்பு வடிவமைப்பாளராக N. சதீஷ்குமார் பணியாற்றுகிறார்.
நாகார்ஜுனா – தபு – அசோக் செல்வன் என ஒவ்வொருவரும் தனித்துவமான கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘கிங் 100 – King 100’ திரைப்படம், படத்தின் புரமோஷன் மூலம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தத் திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் 24ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாகத் திரையரங்குகளில் வெளியாகிறது.