ஒரு குடியிருப்பு.அதன் பெயர் அன்புநகர்.அங்கு வசிக்கும் மக்கள்,தனித்தனி வீடுகளில் இருந்தாலும் ஒரே குடும்பம் போல் பழகி வருகின்றனர்.அன்புநகரில்,
அதுதொடர்பாக காவல்துறையில் புகார் செய்கிறார்கள்.நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள்.அப்போது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின்றன.அவை என்ன?என்பதைச் சொல்கிறது இந்தத் தொடர்.
நாயகனாக நடித்திருக்கும் அஸ்வின்குமார்,அவர் மனைவியாக நடித்திருக்கும் சித்துகுமரேசன்,கதையின் நாயகியாக நடித்திருக்கும் அர்ச்சனா ரவிச்சந்திரன்,முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் வினோத் கிஷன் அவருடைய காதலியாக நடித்திருக்கும் கலைவாணி பாஸ்கர் உள்ளிட்டு தொடரில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் வேடத்துக்கேற்ப
ஒளிப்பதிவாளர் கண்ணா,இசையமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தி,படத்தொகுப்பாளர் ராம் பாண்டியன் ஆகிய தொழில்நுட்பக் கலைஞர்களும் தத்தம் பொறுப்பை உணர்ந்து உழைத்திருக்கின்றனர்.
எழுதி இயக்கியிருக்கிறார் ஜெயச்சந்திரா ஹாஷ்மி.
நாயகனாக நடிப்பவர்களுக்குக் கொடுக்கப்படாத,புதுமனைவியிடம் அன்பாகவும்,அமைதியாகவும் இருப்பதோடு அவ்வப்போது மனைவியைக் கொடுமைப்படுத்தவும் செய்யும் வேடத்தை அஸ்வின் குமாருக்குக் கொடுத்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அர்ச்சனா ரவிச்சந்திரனுக்கு,அஸ்வின் குமாரை தொடர்ந்து கண்காணித்து,அவருக்கு மற்றொரு பெண்ணிடம் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்து சித்து குமரேசனிடம் சொல்வதோடு அஸ்வின் குமாரை மாட்டிவிடும் வேடம் கொடுத்திருக்கிறார்.
அஸ்வின் குமாரால் சித்து குமரேசன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று முடிவுசெய்து காவல்துறையை நாடுகிறார்கள் குடியிருப்பு வாசிகள்,அதன்படி,காவல்துறை விசாரிக்கும்போது,தன்னுடன் எந்தப் பெண்ணும் வசிக்கவில்லை என்றும்,தனக்கு திருமணமே ஆகவில்லை என்றும் அஸ்வின் குமார் சொல்லும் திடுக்கிடல் உட்பட சில திடுக்கிடும் திருப்பங்கள் வைத்திருக்கிறார்.
அதேபோல இந்தச் சிக்கலைத் தீர்க்க துப்பறிபவர்கள் யார்? என்பதில் ஒரு மாற்றம் செய்திருக்கிறார்.
இவை எல்லாமே தொடரை விட்டுவிட்டுப் பார்க்க நினைக்காமல் விடாமல் பார்க்க வைக்கிறது