அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படம் தொடக்க விழா

சில்வர் ட்ரீ ஸ்டுடியோஸ் ( Silver Tree Studios) தயாரிக்கும் முதல் திரைப்படம் – ரஞ்சித் ஜெயக்கொடி (Ranjit Jeyakodi) இயக்கத்தில் உருவாகிறது
 இந்த  திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற பூஜையுடன் தொடங்கியுள்ளது.
 இப்படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்க, படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
இப்படத்தின் மூலம் ப்ரீத்தி பகதாலா (Preethi Pagadala) கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். குடும்பம் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், காதல், குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் வலுவான கதாபாத்திரங்களை உள்ளடக்கிய ஃபேமிலி ரொமான்ஸ் டிராமாவாக உருவாகிறது.
மேலும் இப்படத்தில் கே. எஸ். ரவிக்குமார், சரவணன், யோகி பாபு, பாலா சரவணன், அஷ்வினி நம்பியார், மோனா பெட்ரே, ஜெகன் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தங்களது முதல் தயாரிப்பிலேயே வித்தியாசமான கதைக்களம் மற்றும் திறமையான கலைஞர்களுடன் களமிறங்கியுள்ள Silver Tree Studios, தொடர்ந்து வலுவான கதைகள், புதிய யோசனைகள் மற்றும் திறமையான படைப்பாளர்களை இணைத்து தரமான பொழுதுபோக்கு படைப்புகளை வழங்கும் நோக்கத்துடன் பயணத்தைத் புரொடக்ஷன் no.1 ‘Production No.1’ மூலம் இன்று பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

 

Comments (0)
Add Comment