பழங்குடி மக்களின் வாழ்வியலை பேசும்’ அரிகொம்பன்’

காட்டு யானையை மையமாகக் கொண்டு, அதே காட்டில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்வியலையும், அவர்கள் எதிர்கொள்ளும், பிரச்சினைகளையும் மையமாக கொண்ட திரைக்கதையில் தயாரிக்கப்பட்டுள்ள படம் அரிகொம்பன். இந்தபடத்தின் முன்னோட்டத்தை இயக்குநர் சசிக்குமார் வெளியிட்டுள்ளார்.
அரிகொம்பன்படத்தில் கதாநாயகனாக மிதுன் மகேஸ்வரன்,கதாநாயகியாக கேரளத்தைச் சேர்ந்த தேவிகா, இயக்குநர் சுப்பிரமணியம் சிவா, அப்புக்குட்டி, ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா, மு. ராமசாமி, எதிர்நீச்சல் விமல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஜய் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
காட்டுக்குள் இரண்டு கிராமங்களைப் பிரம்மாண்டமாகச் செட் அமைத்து, அந்தக் கிராம மக்களின் வாழ்வியலையும் காட்டு யானையையும் மையமாகக் கொண்டு விறுவிறுப்பான திரைக்கதையுடன் இப்படத்தை உருவாக்கியுள்ளதாக இதன் இயக்குநரும் கதாநாயகனுமான மிதுன் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 ‘அரிகொம்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது…

 

Comments (0)
Add Comment