இயக்குநர் சசியுடன் இணையும் பட தலைப்புகள் – வெற்றிமாறன்

தமிழ் சினிமாவில் தனித்துவமான கவனத்தை ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் வழியாக  ஈர்த்த இயக்குநர் சசி-விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் ‘நூறு சாமி’ படத்தின் வெளியீட்டுக்கு முன்பான நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன்,
 ”பொதுவாக இயக்குநர்கள் ஒரு படத்தை இயக்கினால், அந்தப் படத்தின் டைட்டில் அவர்களது பெயருடன் சேரும். ஆனால் இயக்குநர் சசிக்கு மட்டும்தான் அந்தந்த படத்தின் பெயர்கள் சேரும். ஏனெனில் எல்லா படங்களையும் அவர் தன்னுடைய முதல் படத்தைப் போலவே முழுமையான அர்ப்பணிப்புடன் உழைத்து உருவாக்குகிறார்.
எங்கள் இருவருக்கும் ஒரு பொதுவான விஷயம் இருக்கிறது. நாங்கள் இருவரும் இயக்குநர் கதிரிடம் உதவியாளராகப் பணியாற்றி இருக்கிறோம்.
இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டேன். இப்போதுதான் சசி சாரின் திரைப்பயணத்தை பற்றி குறிப்பிட்டார்கள். இத்தனை ஆண்டுகால அனுபவம் பெற்றவரின் படைப்பைப் போல அது தெரியவில்லை. ஒரு புது இயக்குநரின் படைப்பைப் போல இளம் தலைமுறை ரசிகர்களை கவரும் வகையில் சொல்லவேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் இருந்தது. இதுதான் அவருடைய தனித்துவம்.
பொதுவாகவே அவருடைய படங்களில் நடிகர்கள் தங்களது திறமையை நன்றாக வெளிப்படுத்துவார்கள். இந்த படத்திலும் அனைத்து நடிகர்கள், நடிகைகளும் தங்களது திறமையை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றிபெறவேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

 

Comments (0)
Add Comment