தொடக்கத்தில் மறுத்து பின்பு அந்தக்காதலை ஏற்கிறார் அர்ஜுன்தாஸ்.எனவே,திருமணம் வரை போகிறார்கள்.திருமண நிகழ்வுகளின் போது ஒரு சிக்கல் வருகிறது நாயகனுக்கு? அது என்ன? அதன் முடிவென்ன? ஆகிய கேள்விகளுக்கான விடைகள்தாம் படம்.
ரகுவரன் எனும் கதாபாத்திரம் ஏற்றிருக்கும் அர்ஜுன் தாஸுக்கு ஏற்ற வேடம்.மிக இயல்பாக நடித்திருக்கிறார்.துறுதுறுப்பா
அர்ஜுன்தாஸின் காதலியாக அஞ்சலி எனும் வேடமேற்றிருக்கும் அதிதி சங்கர்,துள்ளலும் துடிப்புமாக நடித்து படத்துக்கே கலகலப்பூட்டியிருக்கிறார்.
டிராவிட் செல்வம்,அனுஷா பிரபு,ஜகபர்,மோனிஷ் எலமாரன்,தேவதர்ஷினி,நாயகனின் அப்பா அம்மாவாக நடித்திருக்கும்,தயாளன்,ரமா உட்பட படத்தில் நிறைய நடிகர் நடிகைகள் இருக்கிறார்கள்.
அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகு.அதிலும் கேரளப் பின்னணிக் காட்சிகள் கூடுதல் அழகு மட்டுமின்றி கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது அவருடைய ஒளிப்பதிவு
படத்தொகுப்பாளர் நாஷ்,இடையிடையே குழம்பிவிட்டார் போலும் அது படத்திலும் தெரிகிறது.படத்தில் சொல்ல விரும்பிய அழுத்தமான கருத்து சரியாகக் கடத்தப்படவில்லையோ? என்றெண்ணும்படி இருக்கிறது.
ஹேஷாம் அப்துல் வகாப் இசையில் படத்தின் இயக்குநர் விக்னேஷ்ஶ்ரீகாந்த் வரிகளில் பாடல்கள் ரசிக்கும்படி அமைந்திருக்கின்றன.பின்னணி இசை மிக முக்கியம் என்பதை உணர்ந்து இசைத்திருக்கிறார்.
விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுதி இயக்கியிருக்கிறார்.மேலோட்டமா
அதேநேரம் காதல் மற்றும் காதலர்கள் குறித்த இயக்குநரின் சிந்தனைக்கு,அவருடைய எழுத்துக்கு உயிர்கொடுக்கும் வகையில் அர்ஜுன்தாஸும் அதிதிசங்கரும் நடித்திருப்பது படத்துக்குப பலம்.