டோரதி இரண்டாவது பாடல் வெளியானது

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில்,இளையராஜா இசையில் ‘டோரதி’ படத்தின் ‘கல்யாண விருந்து’ என்ற பாடல் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வெளியானது. கல்யாண விருந்து பற்றிய அப்பாடலை இளையராஜாவே எழுதியும் இருந்தார். 80-களின் இசை பாணியில் இருந்த அந்தப் பாடலில் இன்றைய இளைஞர்களுக்கும் ‘வைப்’ வைத்திருந்தார் இளையராஜா.

இந்த நிலையில் ‘முத்துமணிச்சரம்’ என்ற இரண்டாவது பாடல், வெளியாகி உள்ளது. பாடல் ‘பம்சிக் பம்சிக் பம்ச பம்’ என்ற துள்ளல் இசையுடன் தொடங்குகிறது. இசை தொடங்கி இரண்டு நிமிடங்கள் வரை வரிகள் தொடங்கவில்லை. ஆனாலும் ஒலிக்கும் இசைக் கருவிகள் கேட்பவர்களை துள்ள வைத்துக் கொண்டிருக்கின்றன. அதன் பிறகு ‘முத்துமணிச்சரம் கோர்க்கணும்’ எனத் தொடங்குகிறது பெண் குரல்.

பிறகு இளையராஜா பாடுகிறார். 80-களின் தொனியில் அவர் குரல் ஒலிக்க, பின்னணியில் ஓடும் ‘பம்சிக் பம்சிக் பம்ச பம்’ இசை, வரிகளை ரசிக்க வைத்து இப்போதும் நம்மைத் துள்ள வைத்துக் கொண்டு இருக்கிறது.

முதல் பாடலில் கல்யாண விருந்து வைத்திருந்த ‘இளைய’ ராஜா, இந்தப் பாடலில் ரசிகர்களுக்கு வைப் விருந்து வைத்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ், சனத், ரிஷிகாந்த் ஆகியோர் நடிக்கும் ‘டோரதி’ படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சிக்யா எண்டர்டன்மென்ட் உடன் இணைந்து கார்த்திக் சுப்பராஜ் தனது தம்மம் ஃபிலிம்ஸ் பேனரின் கீழ் தயாரிக்கிறார்.

படத்துக்கு எஸ்.திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணியை கணேஷ் சிவாவும், சண்டை பயிற்சியை தினேஷ் சுப்புராயனும் மேற்கொண்டுள்ளனர்.

Comments (0)
Add Comment