கருப்பு திரைப்படத்தின் தொடர் சாதனை அதிகாரபூர்வ அறிவிப்பு

சூர்யா, திரிஷா இணைந்து நடித்த ‘கருப்பு’ திரைப்படம் கடந்த மே15 ஆம்  தேதி திரையரங்குகளில் வெளியானது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான இந்த படம் வணிக ரீதியாக முதல் நாளில் இருந்து வசூலை குவித்து வருகிறது. மக்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

சூர்யா,திரிஷாவுடன், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இந்த படத்தில் நடித்துள்ளனர்.சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

சூர்யாவின் திரையுலக வாழ்க்கையில் திரையரங்குகள் மூலம் மட்டும் ரூ.300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலை கடந்த முதல் திரைப்படமாக ‘கருப்பு’ இடம் பிடித்துள்ளது.

இந்நிலையில், ‘கருப்பு’ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 175 கோடி ரூபாய் வசூலித்ததாக படக்குழு  நேற்று(04.06.2026) நள்ளிரவு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

உலக அளவில் கருப்புதிரைப்படம்  500 கோடி ரூபாயைக் கடந்து, சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகச்சிறந்த வசூல்செய்த திரைப்படமாக இந்தப் படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments (0)
Add Comment