நாயகனாக அறிமுகமாகியிருக்கும் மதுமகேஷுக்கு காதலுக்காக ஏங்கும் கதாபாத்திரம்.காதல் உணர்வுகள், காதலி அண்மையில் இருக்கும் மகிழ்ச்சி அதேநேரம் மனதளவில் இருக்கும் இடைவெளி ஆகிய உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய அழுத்தமான வேடம்.
நாயகியாக நடித்திருக்கும் ஜியா சங்கர், புதுவரவு.அவருடைய அழகும் நடிப்பும் இந்தக்கதைக்கு மிகப் பொருத்தமாக அமைந்திருக்கின்றன.
இன்னொரு நாயகனான அர்ஜுன் அசோகனுக்கு முக்கியமான கதாபாத்திரம்.
முக்கிய வேடமேற்றிருக்கும் எம்.எஸ்.பாஸ்கர்,தன் அனுபவ நடிப்பின் மூலம் படத்துக்குப் முதுகெலும்பாக நடித்திருக்கிறார். சின்னவேடமெனினும் நல்ல வேடமேற்றிருக்கும் விஜிசந்திரசேகர், ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் நன்று.
அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் காட்சிகளிலும் காதல் நிரம்பி வழிகிறது.ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் ரசித்துக் கேட்கும் வண்ணம் அமைந்திருக்கின்றன.
ஆண்டனியின் படத்தொகுப்பு, காதலின் முழுமையை உணரச் செய்யும் வண்ணம் காட்சிகளைத் தொகுத்திருக்கிறது.
சரவணன் வசந்த்தின் கலை இயக்கத்தில் காட்சிகள் மேலும் அழகாகியிருக்கின்றன.
இயக்குநர் விஜய்,எடுத்துக் கொண்ட கதையைக் காட்டிலும் அதற்கு அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதையைக் காட்டிலும் காட்சிகளை வடிவமைப்பதிலும் அவற்றைச் சுவாரசியமாக கொடுப்பதிலும்கைதேர்ந்தவர்.
அழகான நாயகி, பொருத்தமான நாயகன், தேவைக்கேற்ற துணைநாயகன், அனுபவ நடிகர்கள்,கதை ஸ்காட்லாந்தில் நடக்கிறதாஅங்கேயே போய்ப் படமெடுங்கள் என்று சொல்லும் தயாரிப்பாளர் ஆகிய அவ்வளவும் அமைந்திருக்கிறது. ஆனால் இயக்குநர் விஜய் அதை வீணடித்திருக்கிறார்.