ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் ‘குட் பேட் அக்லி’ . ஏப்ரல் 10 ஆம் தேதிபடம் வெளியானது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகி பாபு, பிரியா வாரியர், சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 900க்கும் அதிகமான திரைகளில் திரையிடப்பட்டுள்ளது. முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 30.9 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது.
இந்த நிலையில், இப்படம் மூன்று நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.குட் பேட் அக்லி திரைப்படம் உலகளவில் 3 நாட்களில் 100 கோடி ரூபாய்க்கு அதிகமாக மொத்த வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.