சந்தோஷ் சிவன் இயக்கும் ‘சென்டிமீட்டர் படத்தின் முதல் பார்வை வெளியீடு

பிரபலஒளிப்பதிவாளரும், இயக்குநருமான சந்தோஷ் சிவன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘சென்டிமீட்டர்’ நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்தில்அவருடன் மறைந்தநெடுமுடி வேணு, யோகி பாபு, காளிதாஸ் ஜெயராம், கோகுல் ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர் ஜேக்ஸ் பிஜாய், ராம் சுரேந்தர், கோபி சுந்தர் என மூன்று இசையமைப்பாளர்கள் சென்டி மீட்டர் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள்.
சந்தோஷ் சிவன் மற்றும் அஜில் இணைந்து திரைக்கதை எழுத, சசிகுமரன் சிவகுரு வசனம் எழுதியிருக்கிறார்கள்.
இந்த படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் மற்றும் ஷிவாஸ் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் மற்றும் தயாரிப்பாளர் எம். பிரசாந்த் தாஸ் ஆகியோர் இணைந்து  தயாரித்திருக்கிறார்கள். கதை, ஒளிப்பதிவு, இயக்கம்: சந்தோஷ்சிவன்படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள்  நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்  ‘சென்டிமீட்டர்’ படத்தின் முதல்பார்வையை
இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டிருக்கிறார். இதற்காக பிரத்யேக காணொளி ஒன்றையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.

‘அசுரன்’ படத்திற்கு பிறகு நடிகை மஞ்சு வாரியார்கதையின் நாயகியாக நடித்திருப்பதாலும்  படத்தின் தலைப்பு ‘சென்டிமீட்டர்’ என  இருப்பதாலும், படத்தின் முதல் பார்னுக்கு இணையத்தில்  வரவேற்பு கிடைத்து வருகிறது.

Comments (0)
Add Comment