இந்தப்படம் செப்டம்பர். 10 ஆம் தேதி வெளியாகிறது. இந்தப்படம் வெற்றி பெற்றால் ஹாட்ரிக் வெற்றியை பெற்ற கலைக் குடும்பமாக நடிகர் சிவக்குமார் இருப்பார்.
விழாவில் நடிகர் கார்த்தி பேசியதாவது
அதில் நடிகர்களின் நடிப்பை பார்ப்பார்கள், நடனத்தை கவனிப்பார்கள், சண்டைக் காட்சிகளை ரசிப்பார்கள். பிறகு கிண்டலும் செய்வார்கள். பாராட்டவும் செய்வார்கள். கிண்டல் செய்யும்போது, இவர்கள் பாராட்டும் வகையில் ஒரு படத்தை வழங்க வேண்டும் என ஆசையாக இருக்கும்.
பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதை வேண்டுமானால் நீங்கள் தவிர்க்க முடியாமல் தொடர்ந்திருக்கலாம். இந்தப் படத்தைப் பார்த்து பிறகு இந்தப் படம் சொல்லும் விஷயத்தை உங்களால் தவிர்க்கவே முடியாது. ஏனென்றால் உங்களுடைய ஆரோக்கியத்தை பற்றிய அசைத்துப் பார்க்கும் உண்மையை இதில் சொல்லி இருக்கிறோம். இதுதான் படத்தில் முக்கியமான விஷயம்.
ஒரு படம் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புபவன் நான். அதை இந்தப் படத்தில் இயக்குநர் மித்ரன் செய்திருக்கிறார். படம் வெளியான பிறகு இது தொடர்பான மிகப்பெரிய உரையாடல் ஏற்படும். இவ்வாறு கார்த்தி பேசினார்.
‘