சர்தார்-2 மூலம்ஹாட்ரிக் வெற்றியை எதிர்நோக்கும் சிவக்குமார் குடும்பம்

தமிழ்சினிமாவில் நடிகர், நடிகைகள் தாங்கள் நடித்த படங்களின் மூலம்தொடர்ந்து மூன்று வெற்றியை அனுபவித்திருக்கிறார்கள். திரைப்பட துறையில் இருக்கும் ஒரு குடும்பம் ஒரே ஆண்டில் அடுத்தடுத்து மூன்று வெற்றிகளை பெற்றது இல்லை

அப்படியொரு வாய்ப்பு நடிகர் சிவகுமார் குடும்பத்திற்கு அமைந்திருக்கிறது. அவரது மகன் சூர்யா,  நடித்த கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ்படங்கள் இந்த ஆண்டில் அடுத்தடுத்து வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ஹிட் அடித்தது. இம்மாதம் 10 ஆம் தேதி சூர்யா தம்பி கார்த்தி நடிப்பில் சர்தார்-2 படம் வெளியாக உள்ளது.
பி.எஸ்​.மித்​ரன் இயக்​கத்​தில் கார்த்தி நடித்​துள்ள இந்தபடத்தில் மாளவிகா மோக​னன், ஆஷிகா ரங்​க​நாத், ரஜிஷா விஜயன், எஸ்​.ஜே.சூர்​யா, யோகி பாபு உள்பட பலர் நடித்​துள்​ளனர். பிரின்ஸ் பிக்​சர்ஸ் மற்​றும் ஐவிஒய் என்​டர்​டெய்ன்​மென்ட் நிறு​வனங்​கள் சார்​பில் எஸ்​.லக் ஷ்மன் குமார் மற்​றும் இஷான் சக்​சேனா ஆகியோர் தயாரித்​துள்​ளனர். ஜார்ஜ் சி.​வில்​லி​யம்ஸ் ஒளிப்பதிவு செய்​திருக்​கும் இந்த திரைப்​படத்​துக்கு சாம் சி எஸ் இசையமைத்​திருக்​கிறார்.
இந்​தப்​படம் செப்டம்பர். 10 ஆம் தேதி வெளி​யாகிறது. இந்தப்படம் வெற்றி பெற்றால்  ஹாட்ரிக் வெற்றியை பெற்ற கலைக் குடும்பமாக நடிகர் சிவக்குமார் இருப்பார்.
இதன் இசை மற்​றும் முன்​னோட்ட வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது.

விழா​வில் நடிகர் கார்த்தி பேசி​ய​தாவது

தமிழ் சினிமா என்​பது பொழுது​போக்​குக்​காக மட்​டுமல்ல. தமிழ் சினிமா தமிழ்​நாட்​டின் அடை​யாள​மாக இருக்​கிறது. நான் வெளி​நாட்​டில் படித்​துக் கொண்​டிருக்​கும் போது, தெலுங்கு, இந்தி என பல மொழி திரைப்படங்களைக் காண்​பித்​தா​லும் தமிழ்ப்​படம் என்று காண்​பிக்​கும் போது, அந்த திரைப்​படத்​துக்கு என தனி கலர் உண்​டு.

அதில் நடிகர்​களின் நடிப்பை பார்ப்​பார்​கள், நடனத்தை கவனிப்​பார்​கள், சண்​டைக் காட்​சிகளை ரசிப்​பார்​கள். பிறகு கிண்​டலும் செய்​வார்​கள். பாராட்​ட​வும் செய்​வார்​கள். கிண்​டல் செய்​யும்போது, இவர்​கள் பாராட்​டும் வகை​யில் ஒரு படத்தை வழங்க வேண்​டும் என ஆசை​யாக இருக்​கும்.

பிளாஸ்​டிக் பாட்​டிலில் தண்​ணீர் குடிப்​பதை வேண்​டு​மா​னால் நீங்​கள் தவிர்க்க முடி​யாமல் தொடர்ந்​திருக்​கலாம். இந்​தப் படத்​தைப் பார்த்து பிறகு இந்​தப் படம் சொல்​லும் விஷ​யத்தை உங்​களால் தவிர்க்​கவே முடி​யாது. ஏனென்​றால் உங்​களு​டைய ஆரோக்​கி​யத்தை பற்​றிய அசைத்​துப் பார்க்​கும் உண்​மையை இதில் சொல்லி இருக்​கிறோம். இது​தான் படத்​தில் முக்​கிய​மான விஷ​யம்.

ஒரு படம் மிகப்​பெரிய விவாதத்தை ஏற்​படுத்த வேண்​டும் என்று விரும்​புபவன் நான். அதை இந்​தப் படத்​தில் இயக்​குநர் மித்​ரன் செய்​திருக்​கிறார். படம் வெளி​யான பிறகு இது தொடர்​பான மிகப்​பெரிய உரை​யாடல் ஏற்​படும். இவ்​வாறு கார்த்தி பேசி​னார்.