விற்பனை பிரதிநிதிகளின் வாழ்வியலை பேசும்’ கோல்ட் கால்’

தமிழ் சினிமாவில் புதுமுகங்களின் படைப்புகளுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு.  அந்த வகையில் சித்து மூலி மணி -ஸ்ரீ வைஷ்ணவ்- சந்தோஷ் எஸ் ஏ – கிருஷ்ணா விஜய் சந்திரன்-  ஆகிய நான்கு புதுமுக நடிகர்கள் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘கோல்ட் கால்’  திரைப்படம்.. செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இயக்குநர் தம்பிதுரை இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கோல்ட் கால்’ திரைப்படத்தில் சித்து மூலி மணி, ஸ்ரீ வைஷ்ணவ் ,சந்தோஷ், கிருஷ்ணா விஜய் சந்திரன், வி. ஸ்ரீகாந்த், பாலாஜி ராஜசேகர், அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே ,கீர்த்தனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. என். சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரணவ் கிரிதரன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சுரேஷ் ஆறுமுகம் மேற்கொண்டிருக்கிறார். ஃபீல் குட் திரைப்படமாக உருவாகி இருக்கும் இதனை வாக் த்ரோ என்டர்டெயின்மென்ட் – Walkthrough Entertainment நிறுவனம் சார்பில்  கேசவ மூர்த்தி தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஆக்சன் ரியாக்ஷன் நிறுவனம் சார்பில் ஜெனீஷ் வெளியிடுகிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் கூறுகையில்,
” இந்த சமூகத்தில் விற்பனை பிரதிநிதிகள் என்பவர்களும் உண்டு. இவர்களின் வாழ்வியலில் நடைபெறும் சம்பவங்களை காமெடியாகவும், ஃபீல் குட் என்டர்டெய்ன்மென்ட்டாகவும் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்கும்போது ஜென் ஸீ தலைமுறையினரும் தங்களை இணைத்துக் கொண்டு ஜாலியாக ரசிப்பார்கள். விற்பனை பிரதிநிதிகளான நால்வர் நண்பர்கள். அவர்களுக்குள் ஏற்படும் காதல்- மோதல்- காமெடி- ஆகியவற்றை இரண்டு மணி நேரத்திற்குள் பொழுதுபோக்கு அம்சங்களுடன் சொல்லி இருக்கிறோம்” என்றார்.
Comments (0)
Add Comment